Published:Updated:

`சொத்து மாற்றம்.. மனைவியின் சகோதரிக்குத் தொல்லை?!' - வரதட்சணைப் புகாரில் ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர்

சச்சின் பன்சால்
சச்சின் பன்சால்

``சச்சினின் தாயான கிரண் பன்சால் தன் மருமகள் மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.”

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர், சச்சின் பன்சால். பல் மருத்துவராகப் பணியாற்றி வருபவர், பிரியா. இருவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. சச்சின் மற்றும் பிரியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார். திருமணத்துக்கு முன்பே வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கியதாக தன் கணவர் மீது குற்றம்சாட்டியுள்ள பிரியா, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பெங்களூரில் உள்ள கோரமங்கலா காவல்நிலையத்தில் வரதட்சணைப் புகாரும் அளித்துள்ளார்.

காவல்துறையினரிடம் அவர் அளித்துள்ள புகாரில், ``திருமணத்துக்காக என் தந்தை ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். சச்சினுக்கு ஒரு காருக்குப் பதிலாக ரூ.11 லட்சம் பணமாக கொடுத்துள்ளார்” என பிரியா தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் உள்ள சொத்துகளை அவரது பெயருக்கு மாற்றுமாறு கணவர் தனக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சச்சின் பன்சாலின் தந்தை சத்பிரகாஷ் அகர்வால், அவரின் தாய் கிரண் பன்சால் மற்றும் சகோதரர் நிதின் பன்சால் ஆகியோர் மீதும் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்கூட்டியே வருமான வரி செலுத்திய ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால்!
முன்கூட்டியே வருமான வரி செலுத்திய ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால்!

தொடர்ந்து, ``எனது பெயரில் உள்ள சொத்துகளை மாற்றக்கோரி கடந்த அக்டோபர் மாதம் என்னை துன்புறுத்தினார். அவர் டெல்லிக்குச் சென்றபோது, என் சகோதரியிடமும் தவறான முறையில் நடந்துள்ளார். சொத்துகளை அவருடைய பெயருக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தபோது, அவரின் பெற்றோரும் சகோதரரும் சேர்ந்து என்னை துன்புறுத்தினர்” என பிரியா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், சச்சினின் தாயான கிரண் பன்சால் தன்னுடைய மருமகள் மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

பிரியா புகாரின்பேரில் சச்சின்மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சச்சின் பன்சால் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`பொறுமைக்கும் எல்லை உண்டு!' - கணவர் மீது வரதட்சணை புகார் அளித்த `சக் தே இந்தியா' இன்ஸ்பிரேஷன் பெண்
அடுத்த கட்டுரைக்கு