Published:Updated:

ஜார்க்கண்ட்: போதையில் பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்ட போதை ஆசாமி - மகனின் உதவியால் தப்பிய தந்தை

கழுத்தைச் சுற்றிய பாம்பு

குடிபோதையில் ஒருவர் பாம்பைக் கழுத்தில் எடுத்து சுற்றிக்கொண்டார். பின்னர் அவரை அவரின் மகன் பாம்பிடமிருந்து காப்பாற்றினார்.

குடிபோதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. பெரும்பாலான படங்களில் குடிபோதையில் பாம்பை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டது போன்ற காட்சிகளைப் பார்த்திருப்போம். அது போன்ற ஓர் உண்மைச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம், கார்வா அருகிலுள்ள கிதசோட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிர்ஜலால் ராம். குடிகாரரான ராம் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதுண்டு. வழக்கம்போல் ராம் மது அருந்திவிட்டு வீட்டுக்குகு வந்துகொண்டிருந்தார். வழியில் பாம்பு ஒன்று சென்றுகொண்டிருந்தது. குடிபோதையில் அதைப் பிடித்து ராம் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டார்.

ஜார்க்கண்ட்: போதையில் பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்ட போதை ஆசாமி - மகனின் உதவியால் தப்பிய தந்தை

அமருவதற்கு நல்ல இடம் கிடைத்த மகிழ்ச்சியில் பாம்பு ராம் கழுத்தை நன்றாகச் சுற்றிக்கொண்டது. பின்னர், ராம் பாம்பை கழுத்திலிருந்து எடுக்க முயன்றார். ஆனால், அவரால் எடுக்க முடியவில்லை. பாம்பு கடித்துவிடும் என்ற அச்சத்தில் அவருக்கு அருகில் மற்றவர்கள் செல்ல பயந்தனர். யாருமே அவருக்கு உதவி செய்ய அருகில் வரவில்லை. இறுதியில் ராம் மகனும் அவரின் நண்பரும் சேர்ந்து ராம் கழுத்தில் இருந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பாம்பு நன்றாகக் கழுத்தைப் பிடித்துக்கொண்டதால் அதை அப்புறப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் மிகவும் போராடி பாம்பை ராம் கழுத்திலிருந்து அவரின் மகன் அப்புறப்படுத்தினார். எனினும் நல்வாய்ப்பாகப் பாம்பு ராமைக் கடிக்கவில்லை. அது விஷமுள்ள பாம்பா என்று தெரியவில்லை. பாம்பை ராம் கழுத்திலிருந்து அப்புறப்படுத்தியபோது ராம் லேசான காயமடைந்தார். ராம் கழுத்தில் பாம்போடு போராடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது.