Published:Updated:

கர்நாடகா அதிர்ச்சி: பைக்கை தொட்ட இளைஞர்! - சாதியைக் காரணம் காட்டி தாக்கிய கும்பல்?

கர்நாடகாவில் தாக்கப்பட்ட இளைஞர்
கர்நாடகாவில் தாக்கப்பட்ட இளைஞர்

``என் மகனை அவர்கள் அடிப்பதில் இருந்து தடுக்க முயன்றபோது என்னையும் என்மனைவியையும் மகளையும் தாக்கினர். சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினர்.”

உலகளவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன. இத்தகைய கொடுமையான சூழலிலும் சாதி, மத மற்றும் இனரீதியிலான ஒடுக்குமுறைகள் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாதியரீதியிலான ஒடுக்குமுறைகள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கூறி வருகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் தற்போது மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.

கர்நாடகா அதிர்ச்சி: பைக்கை தொட்ட இளைஞர்! - சாதியைக் காரணம் காட்டி தாக்கிய கும்பல்?

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் இருந்து சுமார் 530 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, விஜயபுரா என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் மினாஜி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சாதியைக் காரணம் காட்டி மாற்று சமூகத்தினர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக அந்த இளைஞரை கும்பலாக சேர்ந்து கடந்த சனிக்கிழமையன்று தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்புகள் மற்றும் காலணிகளைக் கொண்டு அந்த இளைஞரைத் தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இளைஞரின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள புகாரில், ``சென்னம்மா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தைத் தொட்டதாகக் குற்றம்சாட்டி என் மகனை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். என் மகனை அவர்கள் அடிப்பதில் இருந்து தடுக்க முயன்றபோது என்னையும் என் மனைவியையும் மகளையும் தாக்கினர். சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்கும் தீ வைப்பதாக அச்சுறுத்தினர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

``பொணத்துக்குக்கூட சாதி இருக்கா?''- கணவனின் சடலத்தோடு இரண்டு நாள்களாக அல்லாடும் இருளர் பெண்

இதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, ``குடும்ப உறுப்பினர்களின் புகாருக்குப் பிறகு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 28 வயதான அந்த இளைஞரைத் தாக்கிய சுமார் 13 பேரை அடையாளம் கண்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களும் அந்த இளைஞரின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் நடந்த பின்பே முழுமையான உண்மைகள் தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகார்
புகார்

அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கும் நேரத்தில் எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல் கும்பலாக இணைந்து கொரோனா பயத்தை மீறி சாதியைக் காரணம் காட்டி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

`மற்றவர்களைப்போல நீங்களும் சாதி, மதம் பார்க்கிறீர்கள்!' - தாயால் விபரீத முடிவெடுத்த தஞ்சை இளைஞர்
அடுத்த கட்டுரைக்கு