Published:Updated:

கடனுக்காக விவசாயியைத் தாக்கி மிளகாய்ப் பொடி தூவிய நபர்! - வைரல் வீடியோவால் கைது

மத்தியப் பிரதேசத்தில் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராத விவசாயியை ஒரு நபர் கடுமையாகத் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

விவசாயி சோயப் கான்
விவசாயி சோயப் கான் ( ANI )

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் (Khargone) மாவட்டத்தில் உள்ள கச்ரவாத் (Kasrawad) என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோயப் கான். இவர் கடந்த மாதம், அதே பகுதியைச் சேர்ந்த புரூ கான் என்பவரிடம் 12,000 ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். இந்த மாதம் அதைத் திருப்பி தருவதாகக் கூறிய சோயப் கானால், உரிய நேரத்தில் அதைக் கொடுக்க முடியவில்லை.

Viral video
Viral video
ANI

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை கச்ரவாத் கிராமத்தில் உள்ள தன் வயலுக்கு சோயப் கானை வரச் சொல்லியுள்ளார் புரூ கான். அப்போது சோயப் கானுக்கும் புரூ கானுக்கும் இடையே நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்னும் சில நாள்களில் கடனைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார் சோயப். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத புரூ கான், மிகுந்த கோபத்தில், விவசாயியின் கையைக் கட்டி கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

`உழவுப் பணியில் இருந்த டிராக்டரைப் பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள்!’ - தற்கொலைக்கு முயன்ற விவசாயி

முதலில் கையால் தாக்கிய புரூ கான், பிறகு கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கத் தொடங்கியுள்ளார். அப்போதும் கோபம் தீராமல் தான் கொண்டுவந்த மிளகாய்ப் பொடியை சோயப்பின் அந்தரங்க பாகங்களில் கொட்டியுள்ளார். சோயப்பைத் தாக்கும் காட்சிகளை வீடியோ எடுக்கச் சொன்ன புரூ, அதை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். புரூ எடுத்த வீடியோ தற்போது அவருக்கே பாதகமாக முடிந்துள்ளது.

Shoaib Khan
Shoaib Khan
ANI

வீடியோ வைரலானதை அடுத்து நேற்று கர்கோன் போலீஸார், புரூ கான் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி சோயப் கான், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய கர்கோன் காவல்துறை ஆய்வாளர் சசிகாந்த், ``தான் தாக்கப்பட்ட வீடியோ வைரலான பிறகுதான், சோயிப் கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பணம் தொடர்பாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை அழைத்துவந்து விசாரணை நடத்திவருகிறோம். குற்றமிழைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.