Published:Updated:

`ஆர்டர் செய்தது கம்யூனிஸ்ட் அறிக்கை; டெலிவரி செய்தது பகவத் கீதை!' - சர்ச்சையில் அமேசான்

பகவத்கீதை புத்தகம்
பகவத்கீதை புத்தகம்

கொல்கத்தாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் `கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு பகவத் கீதை புத்தகம் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவின் காரியா பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான சுதிர்தா தாஸ், கடந்த 10-ம் தேதி, ஆன்லைன் வணிகத் தளமான அமேசானில் `கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளார். நேற்று முன் தினம், சுகிர்தா தாஸ் ஆர்டர் செய்த புத்தகத்தை அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் அவரது வீட்டில் டெலிவரி செய்துள்ளனர். தனது அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுகிர்தா தாஸ், தான் ஆர்டர் செய்த புத்தகம் டெலிவரி செய்யப்பட்ட மகிழ்ச்சியில் பார்சலைப் பிரித்துள்ளார். பார்சலைப் பிரித்து பார்த்த தாஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவர் ஆர்டர் செய்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்துக்கு மாற்றாக, பகவத் கீதை புத்தகம் பார்சலில் இருந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``கடந்த ஜூன் 10-ம் தேதி அமேசானில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம் தள்ளுபடி விலையில் இருந்ததைக் கண்ட மகிழ்ச்சியில், உடனே ஆர்டர் செய்தேன். கடந்த 13-ம் தேதி புத்தகத்தை நிறுவனத்தின் ஊழியர்கள் டெலிவரி செய்தனர். அலுவலகப் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், பார்சலைப் பிரித்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் ஆர்டர் செய்த புத்தகத்துக்கு மாற்றாக, 120 பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையின் சுருக்க புத்தகம் பார்சலில் இருந்தது” என்று கூறியுள்ளார்.

#ভগবত_ম্যানিফেস্টো প্রথমেই বলি, সম্পূর্ণ লেখাটা পড়ে তারপরই ছবিগুলো দেখবেন, তাহলেই সবচেয়ে ভাল উপভোগ করবেন। যাকে বলে -...

Posted by সুতীর্থ অনলাইন on Saturday, June 13, 2020

தொடர்ந்து அவர் பேசும்போது, ``ஒருவேளை பார்சல் மாற்றி கொண்டு வரப்பட்டுவிட்டதா என்ற எண்ணத்தில், பார்சலில் ஒட்டப்பட்டிருந்த விளக்கத்தைப் பார்த்தேன். அதில், நான் ஆர்டர் செய்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பார்சல் கிடைத்த அன்று இரவு, நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு தொடர்பு கொண்டு ஆர்டரை ரத்து செய்ய கோரியும், ரத்து செய்ய முடியவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாஸுக்கு ஆதரவாகப் பலரும் அவரது பதிவை ஷேர் செய்தும், கமென்ட்களில் விவாதங்களை மேற்கொண்டும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

`ஆன்லைனில் குவியும் ஆர்டர்; தவிக்கும் ஷாப்பிங்தளங்கள்’-1 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அமேசான்
அடுத்த கட்டுரைக்கு