Published:Updated:

`சிட்னி டு இந்தியா; வைரஸ் அறிகுறி!' -மருத்துவமனையில் அனுமதித்த உடன் தற்கொலை செய்துகொண்ட நபர்

கொரோனா
கொரோனா

``பரிசோதனைக்குத் தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கை இன்னும் வராததால், வைரஸ் தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை" - அதிகாரிகள்

உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இருந்து வரும் மக்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் இருந்துவரும் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் விமான நிலையத்தில் தகுந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

அவ்வகையில், ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை திரும்பிவந்த பஞ்சாப்பைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவருக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளன. இவர், பஞ்சாப்பின் ஷாஹீத் பகத் சிங் எனும் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஒரு வருடமாக சிட்னியில் வசித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் அறிகுறி இருந்ததால் டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை! - மேப் ரூட் டெக்னிக்கில் தனிமைப்படுத்தும் கேரளா

மருத்துவமனை அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக பேசும்போது, ``அந்த நபருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிகிறது. பரிசோதனைக்குத் தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கை இன்னும் வராததால், வைரஸ் தொற்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களிலேயே மாடியிலிருந்து குதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவர் அதிகாரிகளிடம் தலைவலி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் விமான நிலையத்துக்கு வந்து அவரை வரவேற்றுள்ளனர். காவலர்கள் அவருடைய வேலை, குடும்பப் பின்னணி ஆகியவற்றை அறிய அவரது குடும்பத்திடம் இன்னும் பேசவில்லை என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

கொரோனா பாதிப்பு - நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை #Corona #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு