Published:Updated:

நொய்டா: `ரிவர்ஸில் வந்த கார்; வாய்க்காலில் வீசப்பட்ட உடல்’ - சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

சிறுவன்
சிறுவன் ( Representational image )

காஃபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அப்பகுதியில் இருந்த வாய்க்கால் ஒன்றில் உடலை வீசிச் சென்றுள்ளார்.

நொய்டா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த காஃபர் என்ற 10 வயதுச் சிறுவன் திடீரென காணாமல் சென்றுள்ளார். பெற்றோர்கள் அவனைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். எங்கும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால் இறுதியில் காவல் நிலையத்துக்குச் சென்று சிறுவனின் தந்தை ஜூம்மான் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ஓட்டுநர்
ஓட்டுநர்
Representational image

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரத்தம் வழிந்தபடி சிறுவன் ஒருவனை ஒருவர் காரில் எடுத்துச் சென்றதாகக் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அப்போது, அந்தக் கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குற்றவாளியை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில், குற்றவாளியின் பெயர் மதன் லால் எனக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவர் பீகார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டெல்லிப் பகுதியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

உ.பி: போலீஸார் கொலை; அதிகாரிகள் தொடர்பு? -ரௌடியைத் தேடும் பணியில் 3000 காவலர்கள்

இதுதொடர்பாக அப்பகுதியின் காவல்துறை அதிகாரி ஜாஸ்மித் சிங் பேசுகையில், ``காஃபர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது லால் தன்னுடையக் காரை ரிவர்ஸ் எடுத்து வரும்போது 10 வயதுச் சிறுவன் மீது மோதியுள்ளார். காஃபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அப்பகுதியில் இருந்த வாய்க்கால் ஒன்றில் உடலை வீசிச் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

காவலர்
காவலர்
Representational image

குற்றவாளி மதன் லாலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, ``காஃபர் இறந்துவிட்டதாகத் தோன்றியது. இதனால், ஏற்பட்ட அச்சத்தில் அவனது உடலை வாய்க்காலில் எறிந்தேன்” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார். சிறுவனது உடலையும் காவல்துறை அதிகாரிகள் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அதிர்ச்சி:`சின்னவன் கொலை; மூத்தவனுக்கு ஜெயில்!’ - அதிர்ச்சியில் அம்மா
அடுத்த கட்டுரைக்கு