Published:Updated:

ஓராண்டாகத் திட்டம் தீட்டி வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; அடையாளத்தை மாற்றி தலைமறைவாக வாழ்ந்தவர் கைது!

கைது

மும்பை வங்கியில் ரூ.12 கோடியைக் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக வாழ்ந்த நபர் புனேவில் பிடிபட்டார்.

ஓராண்டாகத் திட்டம் தீட்டி வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; அடையாளத்தை மாற்றி தலைமறைவாக வாழ்ந்தவர் கைது!

மும்பை வங்கியில் ரூ.12 கோடியைக் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக வாழ்ந்த நபர் புனேவில் பிடிபட்டார்.

Published:Updated:
கைது

மும்பை தானே மான்பாடாவிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கரன்சி சேமிப்பு கிடங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய், கடந்த ஜூலை 12-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். வங்கியில் லாக்கர் சாவிகள் பொறுப்பாளராகப் பணியாற்றிய அல்தாப் ஷேக் (43) இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அல்தாப்பின் சகோதரி நிலோபர் வீட்டில் சோதனை நடத்தி வங்கியில் திருடப்பட்ட பணத்தின் குறிப்பிட்ட பகுதி மீட்கப்பட்டது. இதையடுத்து நிலோபர், கொள்ளையில் ஈடுபட ஷேக்குக்கு உதவிய நண்பர்கள் என மொத்தம் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் ஷேக் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி ஷேக்கின் நடமாட்டத்தை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர். இந்த நிலையில், அவன் புனேவிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
கைது

அவன் புனேவில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு பர்தா அணிந்து தலைமறைவாக வாழ்ந்துவந்தார். போலீஸார் அவரைக் கைதுசெய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ரூ.9 கோடி வங்கிப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, ``மும்ப்ராவில் வசிக்கும் அல்தாப் ஷேக் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் லாக்கர் பாதுகாவலராகப் பணியாற்றிவந்தார். லாக்கர் சாவிகளும் அவரிடமே இருந்தன. வங்கியில் பணியாற்றியபோது கடந்த ஓராண்டாக அங்கிருக்கும் பணத்தைத் திருட ஷேக் திட்டம் தீட்டினார். லாக்கர் இருந்த அறையிலிருந்து எப்படிப் பணத்தை எடுத்துச் செல்வது என்பது குறித்தும், திருடுவதற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கவும் ஓராண்டைச் செலவிட்டார். பின்னர் வங்கியிலிருந்த அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு சிசிடிவி கேமராவை வேலை செய்யவிடாமல் செய்துவிட்டு லாக்கரைத் திறந்து உள்ளேயிருந்து பணத்தை எடுத்து ஏ.சி-யை கழற்றிவிட்டு அந்தத் துளை வழியாக பணத்தை வெளியில் அனுப்பியிருக்கிறார். வெளியில் அவருடைய நண்பர்கள் நின்று பணத்தை வாங்கியிருக்கின்றனர். கொள்ளைபோன 12.2 கோடியில் ரூ.9 கோடி மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது" என்றார்.