Published:Updated:

மும்பை: ஜாலிக்காக ஆட்டோ திருட்டு; சவாரி செய்து இன்ஸ்டாவில் பதிவு - சிறுவன் உட்பட இருவர் கைது!

சித்திரிப்புப் படம்

மும்பையில் நண்பனுடன் சேர்ந்து பொழுதுபோக்குக்காக ஆட்டோவைத் திருடி அதில் சவாரி செய்வதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மைனர் கைதுசெய்யப்பட்டார்.

மும்பை: ஜாலிக்காக ஆட்டோ திருட்டு; சவாரி செய்து இன்ஸ்டாவில் பதிவு - சிறுவன் உட்பட இருவர் கைது!

மும்பையில் நண்பனுடன் சேர்ந்து பொழுதுபோக்குக்காக ஆட்டோவைத் திருடி அதில் சவாரி செய்வதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மைனர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

இளைஞர்கள் பொழுதுபோக்குக்காக என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில வேலைகளைச் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிப்பது வழக்கம். சிலருக்கு பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அவற்றை ஓட்டி வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்திலும் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுண்டு. ஆட்டோவைத் திருடி, அது போன்ற ஒரு செயலில் ஈடுபட்ட இரண்டு பேர் மும்பையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பை செம்பூர் பகுதியில் அடிக்கடி ஆட்டோ ரிக்‌ஷா காணாமல்போவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. கடந்த 31-ம் தேதி செம்பூர் கலெக்டர் காலனியில் நிறுத்தப்பட்டிருந்த தனது ஆட்டோவைக் காணவில்லை என்று கூறி ஒருவர் போலீஸில் புகார் செய்தார். ஏற்கெனவே இது போன்ற புகார் பதிவாகியிருந்தது. சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்ததில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டது இரண்டு பேர் என்று தெரியவந்தது. அவர்களின் படங்கள் போலீஸ் பதிவுகளில் இல்லாததால் அவர்கள் யார் என்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து அந்தத் திருடர்கள் குறித்து போலீஸார் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தேட ஆரம்பித்தனர். இன்ஸ்டாகிராமில் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டும் வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.

மும்பை: ஜாலிக்காக ஆட்டோ திருட்டு; சவாரி செய்து இன்ஸ்டாவில் பதிவு - சிறுவன் உட்பட இருவர் கைது!

அந்த நபரின் புகைப்படம் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தோடு ஒத்துப்போனது. இதையடுத்து அவரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர முயற்சியில் இறங்கினர். போலீஸ் உளவாளிகள் மூலமும் போலீஸார் துப்பு துலக்கினர். இதில் 14 வயது மைனர் பையன், 19 வயது அர்மான் அன்சாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ``ஒவ்வொரு முறையும் ஆட்டோவைத் திருடியவுடன் அதை ஓட்டும்போது வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் குற்றவாளிகள் பதிவிட்டு வந்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அன்சாரி ஆட்டோ டிரைவர். மெக்கானிக்காகவும் இருக்கிறார். சொந்தமாக ஆட்டோ வாங்கப் பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டுவந்தார். ஆனால் 14 வயது மைனர் சிறுவன் பொழுதுபோக்குக்காக இது போன்ற ஆட்டோ திருட்டில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது.

தாங்கள் செய்கிற குற்றத்தின் தன்மை தெரியாமல் இருவரும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒரு முறை ஆட்டோவை ஓட்டிப்பார்த்துவிட்டு கேரேஜில் நிறுத்திவிடுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து நான்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மைனரை இனிமேல் இது போன்ற காரியத்தில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து விடுவித்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.