Published:Updated:

பள்ளியின் நுழைவுவாயில், சுவர், வழிநெடுக எழுதப்பட்ட `Sorry'; குழப்பத்தில் மக்கள்; போலீஸ் விசாரணை!

'Sorry' written on school wall ( ANI )

பெங்களூரில் உள்ள சாந்திதாமா தனியார் பள்ளியின் சுவரில், படிக்கட்டுகளில், பள்ளிக்குச் செல்லும் வழியில் என சிவப்பு வண்ணத்தால் 'sorry' என எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எழுதியது யார் என்பது புரியாமல் அங்குள்ள மக்கள் குழம்பியுள்ளனர்.

செய்த தவற்றை உணர்ந்து, மனதார கேட்கும் வார்த்தை... மன்னிப்பு. இதை நேரிலோ, குறுஞ்செய்தி மூலமாகவோ கேட்கலாம்.

'Sorry' written on school steps
'Sorry' written on school steps
ANI

ஆனால், பெங்களூரில் ஒரு மர்ம நபர் மன்னிப்பைக் கேட்ட விதம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெங்களூரில் உள்ள சாந்திதாமா தனியார் பள்ளியின் சுவரில், படிக்கட்டுகளில், பள்ளிக்குச் செல்லும் வழிகளில் எனப் பல இடங்களிலும் சிவப்பு வண்ணத்தால் பெரிது பெரிதாக 'Sorry' என, மே 23-ம் தேதியன்று எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாரை, எதற்காக, ஏன் மன்னிக்க வேண்டும், எழுதியது யார் என்பது ஏதும் புரியாமல் அங்குள்ள மக்கள் குழம்பியுள்ளனர்.

'Sorry' written on the way
'Sorry' written on the way
ANI

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது தொர்பாக ஒரு புகார் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து போலீஸார் சிசிடிவி உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.