Published:Updated:

சத்தீஸ்கர்: பச்சிளம் பெண் குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்... வைரல் சம்பவமும் விசாரணையும்!

குழந்தை
News
குழந்தை

தற்போது அக்குழந்தை ‘தி சைல்டு லைன்’ திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டு ‘அகன்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் உள்ள சரிஸ்டல் கிராமத்தில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் வயலில் கைவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பச்சிளங்குழந்தை இரவு முழுவதும் ஒரு நாயின் அரவணைப்பில் அதன் குட்டிகளுடன் ஒரு குழந்தையாகக் கிடந்துள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் குழந்தையைக் கண்டபோது, முதலில் தெருநாய்கள் சுற்றித் திரிவதைக் கண்டனர். முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்பு அந்த நாய் (தாய்) தன் குட்டிகளுடன் இரவு முழுவதும் பாதுகாத்ததை அறிந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை
இந்தச் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, விலங்குகளை மீட்க உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘ஜீவ் ஆஷ்ரயா’ தனது பேஸ்புக் பக்கத்தில் பிறந்த குழந்தையின் மூன்று படங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளது. அதில் "Million Times better than Human" என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அங்குள்ள பொதுமக்கள் சிலர் கூறுகையில், “நாங்கள் வேலைக்காக வெளியே வந்திருந்தோம், காலை 11 மணியளவில் கிராமத்தில் நாய்களுக்கு மத்தியில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று கிடப்பதைப் பார்த்தோம். பின்னர், சுகாதாரத்துறைக்குத் தகவல் கொடுத்தோம். பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு ASI சிந்தாராம் பிஞ்ச்வார் ஒரு குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து பச்சிளங்குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்" என்று அங்குள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை
தற்போது அக்குழந்தை ‘தி சைல்டு லைன்’ திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டு ‘அகன்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனிடையே, கைவிடப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார், "செய்தியைப் படித்து நான் வருத்தமடைந்தேன். குழந்தையை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஒரு பெண், மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பாகுபாடு பார்த்து அதனால் அவதிப்படுகிறார் என்றால், மகளே, அப்படியானால் நீ ஒரு பெற்றோராக இருக்கவே தகுதியற்றவள்."

மேலும், “குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற பாவங்களை நிறுத்துங்கள். மரபுவழி சிந்தனையைக் கைவிடுங்கள், மகனையும் மகளையும் சமமாகக் கருதுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.