Published:Updated:

கடல் கடந்து ஒன்றுகூடிய 2 ஆயிரம் இஸ்லாமியர்கள்; பெண்பார்க்கும் படலம், களைகட்டிய நிகழ்ச்சி!

இஸ்லாமியர்கள் ஒன்றுகூடிய விழா

விருதுநகர் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற இஸ்லாமியர்கள் ஒன்றுகூடிய விழா ஏ.புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

கடல் கடந்து ஒன்றுகூடிய 2 ஆயிரம் இஸ்லாமியர்கள்; பெண்பார்க்கும் படலம், களைகட்டிய நிகழ்ச்சி!

விருதுநகர் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற இஸ்லாமியர்கள் ஒன்றுகூடிய விழா ஏ.புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Published:Updated:
இஸ்லாமியர்கள் ஒன்றுகூடிய விழா
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ஏ.புதுப்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் பலரும் வளைகுடா நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் பணியில் உள்ளனர். கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்ட ஏ.புதுப்பட்டி கிராம இஸ்லாமிய மக்கள், ஆண்டுதோறும் ஒன்றுகூடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெற்றது. புலம்பெயர் இஸ்லாமிய பெருமக்கள் கூடுகை தினத்தையொட்டி ஏ.புதுப்பட்டி கிராம ஜமாத் சார்பில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒற்றுமையை பேணும் விதம் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முதல் நாளன்று வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து ஏ.புதுப்பட்டி திரும்பிய மண்ணின் மைந்தர்களுக்கு வரவேற்பும் விருந்தும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில் பெண்களுக்கு குச்சியாட்டம், ஆடல்-பாடல், நடனம் சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கு வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், கருத்தரங்கமும், பிரியாணி மற்றும் கறி சோறுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டு விழா நிறைவு பெற்றது.

குடும்பங்கள் ஒன்றுகூடி பேசும் காட்சி
குடும்பங்கள் ஒன்றுகூடி பேசும் காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிகழ்ச்சி குறித்து திரைப்பட இயக்குநரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கஸாலியிடம் பேசினோம், "இந்த நிகழ்ச்சியில் யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. நிகழ்ச்சியைத் திட்டமிடுதல், செயலாக்குதல், ஒருங்கிணைத்தல், அழைப்பு கொடுப்பது, ஏற்பாடுகள் செய்வது, போட்டிகள் நடத்துவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான குழுக்கள் அமைச்சு வேலைய பிரிச்சி பார்ப்போம். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே ஏ.புதுப்பட்டி கிராமத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் பிரிந்துபோன இஸ்லாமிய மக்களை மீண்டும் சந்திக்கச் செய்து உறவுகளை பலப்படுத்துவது தான். நவீன காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லா விஷயத்தையும் போன்லையும், கம்ப்யூட்டர்லயும் செஞ்சுட்டு போயிட முடியாது. உறவுகளைப் பலப்படுத்த இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நமக்கு அவசியம். அதனால இஸ்லாமிய சொந்த பந்தங்கள் அனைவரையும் வரவழைச்சு, எங்களோட ஒரு வருஷ ஏக்கத்தை இந்த ரெண்டு நாள்ல தீர்க்க முயற்சி பண்ணுவோம்.

இந்த நிகழ்ச்சிக்காக எங்க வீட்டு குழந்தைகளும் ரொம்ப எதிர்பார்ப்போட இருப்பாங்க. இந்த நிகழ்ச்சிக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்துல கூடிருக்கோம். இதுக்காக பல பேரும் வெளிநாட்டிலிருந்து விடுமுறை எடுத்துட்டு வந்திருக்காங்க. நிகழ்ச்சியோட ஒருபகுதியா நடக்குற கருத்தரங்கில் இங்கிருந்து வெளியூருக்கு புலம்பெயர்ந்து சென்ற இஸ்லாமியர்கள் சார்பாக ஊருக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன் தீர்மானிப்போம். அதன்படி

ஊருக்குத் தேவையான விஷயங்களை வருடம் தோறும் நாங்க செஞ்சுட்டு வர்றோம். அதன்படிதான் உள்ளூர் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும்படி நூலகம் அமைச்சி கொடுத்திருக்கோம். ஜமாத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுத்திருக்கோம். 3 வருஷத்துக்கு முன்னாடி இது காலி இடமாகத்தான் இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை அப்போ நாங்க நடத்துறதுக்கே கிட்டத்தட்ட 1.50 லட்ச ரூபாய் செலவாச்சு. இந்த செலவுத் தொகையை குறைக்க நாமே ஒன்னுசேர்ந்து காசுபோட்டு ஏன் கட்டடம் கட்டக்கூடாதுன்னு அன்னைக்கு நடந்த கூட்டத்தில் தீர்மானித்தோம். அதன்படி உடனே சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து சமுதாய நலக்கூடம் கட்டும் திட்டத்தை முன்வைத்து பணம் வசூல் செஞ்சோம். அதன் பணனா‌ ரூ.58 லட்சம் செலவுல இன்னைக்கு இந்த சமுதாய நலக்கூடத்தைக் கட்டி முடிச்சிருக்கோம். கழிவறை, குடிநீர் வசதி, மின்சாரம், சமையல் கூடம், சாப்பிடும் இடம், வாகன நிறுத்தம்னு சகல வசதிகளோடு இருக்கனும்னு பார்த்து பார்த்து செஞ்சிருக்கோம். இது மாதிரி ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பேசி ஊர் நன்மைக்காக முடிவெடுக்கிற கூட்டமாகவும் இந்த நிகழ்ச்சி அமையுது. இந்த நிகழ்ச்சிக்காக தனியா ஜமாத்கிட்ட இருந்து எந்தத் தொகையும் வாங்குறதில்ல. நாங்களே எங்களால முடிஞ்ச தொகையைக் கொடுத்து செலவழிப்போம்.

இயக்குனர் கஸாலி
இயக்குனர் கஸாலி


இந்த நிகழ்ச்சியில் ரொம்ப முக்கியமான அம்சம் பெண் பார்க்கும் படலம். இது நிகழ்ச்சியில் வெளிப்படையா நடக்கிற விஷயம் இல்லை. இரண்டு குடும்பம் ஒன்னுசேர்ந்து ஒருஇடத்துல பேசும்போது அந்தந்த குடும்ப விவரத்தை பகிர்ந்துப்பாங்க. அதுல கல்யாணமாகாத ஆண் பெண் விவரங்கள் தெரியவரும்போது இரண்டு பேருக்கும் கல்யாணம் பேசி முடிச்சுப்பாங்க. இது இந்த நிகழ்ச்சியில் மறைமுகமாக நடக்கிற ஒரு சம்பிரதாயம். எனவே உறவுகள் தொடர்கதையா வளரக்கூடிய நிகழ்ச்சியாகவும் இது பார்க்கப்படுது. இரண்டு நாள் நிகழ்ச்சி நடந்து முடிஞ்சி ஊருக்கு கிளம்பும்போது வந்த அனைவருக்கும் மன மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுக்கறதுதான் எங்கள் நோக்கம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism