Published:Updated:

`எல்லையில் பிடிபட்ட புறா.. கால்களில் எண்கள்.. பாகிஸ்தான் உளவு வேலையா?’- அதிகாரிகள் சொல்லும் விளக்கம்

எல்லையில் பிடிபட்ட புறா
எல்லையில் பிடிபட்ட புறா

``கடந்த காலங்களில் இதுபோன்று பறவைகள் உளவு பார்க்க அனுப்பப்பட்டு பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வேத எல்லையில் இருப்பதால் அப்பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் ஊடுருவல்கள் மிகவும் பொதுவானது.”

காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தின் ஹிரா நகர் பகுதியில் அமைந்துள்ள எல்லை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை புறா ஒன்று பறந்து வந்தது. அதன் கால்களில் எண்கள் பொறிக்கப்பட்ட டேக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப் புறாவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானால் இந்தப் புறா அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அதன் கால்களில் இருந்த எண்கள் பயங்கரவாதிகளின் ரகசியக் குறியீடாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகப்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, யாருக்கு இந்தப் புறா அனுப்பப்பட்டிருக்கும், எங்கிருந்து வந்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

புறா
புறா

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தப் புறா தன்னுடையது என உரிமை கோரியுள்ளார். மேலும், அந்தப் புறா தொடர்பாக வேறு சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் அதை விடுவிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக காஷ்மீரின் உயர் காவல்துறை அதிகாரி ஷைலேந்திர மிஸ்ரா பேசும்போது, ``சந்தேகத்துக்கு இடமாகப் புறாவைப் பற்றி எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, அந்தப் புறா விடுவிக்கப்படுகிறது” என்றார். புறாவைப் பிடித்த அதே இடத்தில் அதை விடுவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vikatan

புறாவை உரிமைக்கோரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபிபுல்லா ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம், ``ஒரு அப்பாவி பறவை அது” என்று கூறி அதை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதை விடுவித்த பின்னர் தன்னுடைய உரிமையாளரிடம் புறா சென்று சேர்ந்ததா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர். புறாவின் கால்களில் இருந்த அதிகாரிகளால் பயங்கரவாதிகள் அனுப்பியுள்ள ரகசியக் குறியீடாகக் கருதப்பட்ட அந்த எண்கள் தன்னுடைய அலைபேசி எண்கள் என்று தெரிவித்துள்ளார், ஹபிபுல்லா. அந்தப் புறா பந்தையங்களில் பங்கேற்கக்கூடியது என்றும் கூறியுள்ளார்.

புறாக்கள்
புறாக்கள்

காவல்துறையினரின் பதிவுகளின் படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் எல்லையின் அருகில் உள்ள கீதா தேவி என்பவரின் வீட்டில் இந்தப் புறா பிடிபட்டுள்ளது. இந்தப் புறாவை எல்லை பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். எல்லை பாதுகாப்பு வீரர்கள் புறாவை அப்பகுதி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த காலங்களில் இதுபோன்று பறவைகள் உளவு பார்க்க அனுப்பப்பட்டு பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ``சர்வேத எல்லையில் இருப்பதால் அப்பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் ஊடுருவல்கள் மிகவும் பொதுவானவை. பறவைகளைப் பொதுவாக எல்லையில் உள்ளவர்களுக்கு செய்திகளை அனுப்பப் பயன்படுத்துகின்றனர். பறவைகள் பொதுவாக சந்தேகத்துக்கு உள்ளாவதில்லை. சப்தமில்லாமல் அவை தங்களுடைய வேலைகளைச் செய்கின்றன” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

720 நாள்களுக்கும் மேலாக விண்ணில் சுற்றும் ரகசிய விமானம்... அமெரிக்க உளவு பார்க்கும் கருவியா?
அடுத்த கட்டுரைக்கு