Published:Updated:

ஆந்திரா: கொரோனாவே இல்லாத கிராமம்; ஆச்சர்யப்படுத்தும் ஊர்மக்களின் சுய கட்டுப்பாடு!

Indian village - Representational Image
Indian village - Representational Image ( Pixabay )

கொரோனா முதல் அலையை கடந்து இரண்டாம் அலையில் மிக பெரிய பாதிப்பை இந்தியா சந்தித்து வரும் இந்த நிலையிலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர்கூட இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது பாராட்டுக்குரிய செய்தி.

கொரோனா முதல் அலையை கடந்து இரண்டாம் அலையில் மிகப் பெரிய பாதிப்பை இந்தியா சந்தித்து வரும் நிலையிலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர்கூட இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது, திரும்பிப்பார்க்க வைக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை இந்த ஊர் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜி கொண்டுரு மண்டலத்தில் உள்ள சிறிய கிராமம் துக்கிரிலப்பாடு.

 Village - representational image
Village - representational image

இங்கு பின்பற்றப்படும் சுகாதார முறைகளாலும், சமூக விழிப்புணர்வு முயற்சிகளாலும் இந்த கிராம மக்கள் பின்பற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாலும் இங்கு வசிக்கும் மக்களில் ஒருவர்கூட இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

தெலங்கானாவிற்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் 1,000 பேர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலம் முதல் இவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் விவசாயத்தை சார்ந்தே பணி செய்கின்றனர்.

கிராமத்தை விட்டு அடிக்கடி வெளியே செல்வதற்கும், வெளியூர் மக்கள் கிராமத்திற்குள் நுழைவதற்கும் இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இங்கு வசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணியாமலோ, சானிட்சைஸரை எடுத்துக்கொள்ளாமலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதில்லை. மேலும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தல் மற்றும் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை தெளித்தல் ஆகிய பணிகளை வாரம் இருமுறை மேற்கொள்கின்றனர். கிராமத்தில் உள்ள வடிகால்கள் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.

`எங்கள் கிராமத்தில் எட்டு கடைகள் உள்ளன. கூட்டம் சேர்வதைத் தடுக்க, ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என்று வரையறுத்துள்ளோம்' என்கிறார்கள் ஊர்மக்கள்.

corona
corona

மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கிராமத்தில் எந்தவொரு திருவிழா, விசேஷங்கள், நிகழ்ச்சிகள், சடங்குகள் எதுவும் நடத்த வேண்டாம் என்று இந்த கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் அண்டை கிராமங்களில் வசிக்கும் உறவினர்களின் விசேஷங்களில்கூட இந்த கிராமத்தினர் கலந்து கொள்வதில்லை. இதுபோன்ற சுயகட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலேயே இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இந்தக் கொரோனா காலத்தில் இது உலகத்துக்கே முன்மாதிரி கிராமம்!

அடுத்த கட்டுரைக்கு