Published:Updated:

பெங்களூரு சாலையில் மகன் கண் எதிரிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட பெண்; கொலைக்கு காரணம் கணவரா?

Murder (representational image)
News
Murder (representational image)

சிசிடிவி காட்சிகளில், இரண்டு பேர் அர்ச்சனாவைத் தாக்குகின்றனர். அவர் தன்னைத் தாக்கியவர்களிடமிருந்து தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. அர்ச்சனா ஜிகானியிலிருந்து பெல்லந்தூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை, அவரின் மகன் எதிரிலேயே, பரபரப்பான பிரதான சாலை ஒன்றில் வெட்டிக் கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பரபரப்பான போக்குவரத்துப் பின்னணிக் காட்சிகள் இருக்க, காரில் சென்றுகொண்டிருக்கும் அந்தப் பெண்ணை காரிலிருந்து வெளியே இழுத்து இரண்டு பேர் கொலை செய்யும் சம்பவத்தின் வீடியோ பலரையும் அதிரவைத்துள்ளது.

டிசம்பர் 27-ம் தேதி (திங்கள்கிழமை) பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியில், வாகன ஓட்டி மற்றும் தன் மகன் முன்னிலையில் கொல்லப்பட்ட அந்தப் பெண், 38 வயதான அர்ச்சனா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Death (Representational Image)
Death (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிசிடிவி காட்சிகளில், பிஸியான நகரப் போக்குவரத்துச் சாலையில், இரண்டு பேர் அர்ச்சனாவைத் தாக்குகின்றனர். அவர் தன்னைத் தாக்கியவர்களிடமிருந்து தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. அர்ச்சனா ஜிகானியில் இருந்து பெல்லந்தூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட அர்ச்சனாவின் கணவரே இந்தக் குற்றத்தின் பின்னணியில் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்), அர்ச்சனா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நவீன் குமார் என்ற நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நவீனுக்கும் அர்ச்சனாவுக்கும் சொத்து மற்றும் பணம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டதாகவும், நவீன் அர்ச்சனாவை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஜிகானி காவல்நிலையத்தில் அர்ச்சனா புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். இருவரும் கடந்த சில நாள்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

திங்கள்கிழமையன்று, அர்ச்சனா தன் மகன் மற்றும் சிலருடன் ஜிகானி நகராட்சி கார்ப்பரேஷன் தேர்தலில் வாக்களிக்கச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இரவு 10 மணியளவில், ஓசூர் சாலையில் உள்ள புதிய சாலை சந்திப்பு சிக்னல் அருகே, அர்ச்சனாவின் காரை வழிமறித்தவர்கள், ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து அவரைத் தாக்கியுள்ளனர்.

Murder (Representational Image)
Murder (Representational Image)

எஃப்.ஐ.ஆரின் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து அர்ச்சனாவை வெளியே இழுத்துச்சென்று, அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். வாகனத்தின் ஓட்டுநர் காரை நகர்த்த முயன்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் இரு சக்கர வாகனத்தை முன்னால் நிறுத்தி வாகனத்தைத் தடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட அர்ச்சனா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். எஃப்.ஐ.ஆரில் நவீன் மற்றும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் 307 (கொலை முயற்சி), 302 (கொலை), 120-பி (குற்றச் சதி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதான சாலையில், மகன் கண் எதிரிலேயே அம்மா கொல்லப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.