Published:Updated:

44 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட 16 வயது பெண் யூடியூபர்; மகாராஷ்டிராவில் மாயமாகி மபி-யில் மீட்பு!

16 வயது பெண் யூடியூபர்

பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்ற யூடியூபர் மத்தியப் பிரதேச ரயிலில் மீட்கப்பட்டார்.

44 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட 16 வயது பெண் யூடியூபர்; மகாராஷ்டிராவில் மாயமாகி மபி-யில் மீட்பு!

பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்ற யூடியூபர் மத்தியப் பிரதேச ரயிலில் மீட்கப்பட்டார்.

Published:Updated:
16 வயது பெண் யூடியூபர்

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் காவ்யா ஸ்ரீ யாதவ். இவர் பிந்தாஸ் காவ்யா என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோக்களை அதிக அளவில் வெளியிட்டு புகழ் பெற்றார். பின்னர் யூடியூப் சேனலை கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பித்தார். தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு 44 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். வெறும் 16 வயதேயாகும் காவ்யா யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று முன் தினம் தன் பெற்றோருடன் காவ்யா சண்டைபோட்டார். காவ்யாவை அவர் தந்தை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

44 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட 16 வயது பெண் யூடியூபர்; மகாராஷ்டிராவில் மாயமாகி மபி-யில் மீட்பு!

வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பக்கத்தில் தேடிப்பார்த்தனர், கிடைக்கவில்லை. உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து காவ்யாவை தேடி வந்தனர். அவுரங்காபாத்திலிருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையிட உத்தரவிடப்பட்டது. அவர் புகைப்படமும் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அவரது யூடியூப் சேனலில் அவர் தந்தை நேரடியாகப் பேசினார். காவ்யாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடிக்க உதவும்படியும் அதில் பேசியிருந்தார். பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். அருகில் காவ்யாவின் தாயாரும் அமர்ந்திருந்தார்.

பெற்றோருடன் சேர்ந்த காவ்யா
பெற்றோருடன் சேர்ந்த காவ்யா

இந்த நிலையில், புஷாவல் ரயில் நிலையத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது ஸ்லீப்பர் பெட்டியில் காவ்யா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் இதர்சி ரயில் நிலையத்தில் வண்டி வந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். உடனே அவர் பெற்றோருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் காவ்யாவை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.