Published:Updated:

சமூக ஊடகங்களுடன் ஆதார் இணைப்பு! - அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தையும் தன்வசம் மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, குற்றக் கண்காணிப்புக்கு ஏதுவாக அனைத்துச் சமூக ஊடகக் கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என ஆண்டனி கிளெமன்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது. இதேபோல மற்ற உயர் நீதிமன்றங்களில் சில வழக்குகள் நிலுவையில் இருந்தன.

Vikatan

இந்த நிலையில், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தது. தற்போது இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தன்வசம் மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்
ஃபேஸ்புக் நிறுவனம்

இவ்வழக்கில் சமூக ஊடகங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க ஜனவரி மாதம்வரை மத்திய அரசு கால அவகாசம் கோரியுள்ள நிலையில் ஜனவரி இறுதி வாரம் இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.