Published:Updated:

இந்தி vs மாநில மொழிகள் சர்ச்சை; மோடியின் கருத்தை வரவேற்ற கிச்சா சுதீப்!

மோடியின் கருத்தை வரவேற்ற கிச்சா சுதீப்!

"எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்று மோடி இப்போது பேசியுள்ள கருத்தைத்தான் நானும் அன்றைக்கு முன்வைத்தேன்" - கிச்சா சுதீப்

இந்தி vs மாநில மொழிகள் சர்ச்சை; மோடியின் கருத்தை வரவேற்ற கிச்சா சுதீப்!

"எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்று மோடி இப்போது பேசியுள்ள கருத்தைத்தான் நானும் அன்றைக்கு முன்வைத்தேன்" - கிச்சா சுதீப்

Published:Updated:
மோடியின் கருத்தை வரவேற்ற கிச்சா சுதீப்!

"இந்தி ஒருபோதும் தேசியமொழி கிடையாது" எனப் பட ப்ரோமோஷன் ஒன்றில் கிச்சா சுதீப் பேசியதும் அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "இந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்" எனப் பதிலளித்ததும் அது மொழி விவகார சர்ச்சையாக மாறியது. இருவருக்குமிடையிலான ட்விட்டர் கருத்து மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருவரும் சமாதானம் அடைந்தாலும் இந்த விவகாரம் அத்தோடு முடிந்துவிடவில்லை.

இந்நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க அலுவலக பொறுப்பாளர்களுக்கான மாநாட்டில் இணைய வழியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, "மொழிகளை வைத்து சர்ச்சையை உருவாக்கும் முயற்சிகள் சில நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. மக்களுக்கு இது குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்திய பண்பாட்டின் கூறுகள் அனைத்து வட்டார மொழிகளிலும் பிரதிபலிப்பதை பா.ஜ.க உணர்ந்துள்ளது. எதிர்காலத்தில் தேசத்தை ஒருங்கிணைக்கக் கூடியதும் இதுவே. புதிய கல்விக் கொள்கையில் வட்டார மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது நமது கொள்கைகளை வெளிப்படையாக காட்டுகிறது" எனப் பேசியுள்ளார்.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்

இதனை வரவேற்றுள்ள கிச்சா சுதீப், "நான் கலகத்தையோ விவாதத்தையோ உருவாக்க முயற்சி செய்யவில்லை. எந்தவித நோக்கமுமின்றி நிகழ்ந்தது அது. பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமிதத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது. மொழியை மரியாதையோடு நோக்குபவர்களுக்கு அவர் பேசியுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்று மோடி பேசியுள்ள கருத்தைத்தான் நானும் அன்றைக்கு முன்வைத்தேன். நரேந்திர மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்கவில்லை, நமது தலைவராகவே பார்க்கிறோம்" என்று தெரிவித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!