Published:Updated:

கர்நாடகா: ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

சன்னி லியோன்

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவியின் ஹால் டிக்கெட்டில் மாணவியின் புகைப்படத்திற்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா: ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவியின் ஹால் டிக்கெட்டில் மாணவியின் புகைப்படத்திற்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Published:Updated:
சன்னி லியோன்

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (TET-2022) கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இதில், இந்தத் தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவி ஒருவர் தனது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யும்போது அதில் தனது புகைப்படத்திற்குப் பதிலாக நடிகையான சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தான் தேர்வு எழுதும் ருத்ரப்பா கல்லூரி அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவித்துள்ளார். இதை அறிந்த அக்கல்லூரியின் முதல்வர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பேசுபொருளாகியுள்ளது.

வைரலாகி வரும் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்ற விண்ணப்பம்.
வைரலாகி வரும் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்ற விண்ணப்பம்.

இந்நிலையில், அம்மாநில கல்வித் துறை இது குறித்து விசாரணை செய்யுமாறு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளது. மேலும், இது பற்றிக் கூறிய அம்மாநில கல்வித் துறை, "விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு 'user ID and password' உருவாக்கப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்களைத் தவிர வேறுயாரும் உள்நுழைய முடியாது. அவர்கள் என்ன புகைப்படத்தை பதிவேற்றம் செய்கிறார்களோ அதைக் கணினி எடுத்துக்கொள்ளும். எனவே, இதில் எங்கள் நிர்வாகத்தின் பங்கு ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் பங்களிப்பு மட்டுமே இதில் இருக்க வாய்ப்பிருக்கிறது. இது குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறோம்," என்று விளக்கமளித்துள்ளது.