Published:Updated:

`மை டிரீம் பாய்’... சுகேஷைத் திருமணம் செய்ய விரும்பிய ஜாக்குலின்... வெளியாகும் விசாரணைத் தகவல்கள்!

ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் `கனவு நாயகன்’ என்று அழைப்பார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

`மை டிரீம் பாய்’... சுகேஷைத் திருமணம் செய்ய விரும்பிய ஜாக்குலின்... வெளியாகும் விசாரணைத் தகவல்கள்!

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் `கனவு நாயகன்’ என்று அழைப்பார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மிரட்டிப் பறித்த பணத்தை பாலிவுட் நடிகைகளுக்குச் செலவு செய்தது அமலாக்கப் பிரிவின் விசாரணையில் தெரியவந்தது. இதில் அதிகமாகப் பயனடைந்த ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப் பிரிவு பல முறை விசாரணை நடத்தியிருக்கிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டுமல்லாமல் நடிகை நோரா ஃபதேஹியும் சுகேஷிடம் பரிசுப்பொருள்கள் வாங்கியிருக்கிறார். அவரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. அதோடு சுகேஷ் மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. குற்றப்பத்திரிகை நகலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்துத் தெரிந்தவுடன் அவருடனான நட்பை நடிகை நோரா ஃபதேஹி துண்டித்துக்கொண்டார். ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து சுகேஷுடன் தொடர்பில் இருந்துவந்ததாக அமலாக்கப் பிரிவு தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் பண மோசடி வழக்கில் நேரடித் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

சுகேஷ், தனது பண பலத்தைக் காட்டி பாலிவுட் நடிகைகளிடம் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றிருக்கிறார் என்று டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் ரவீந்தர் தெரிவித்தார். சுகேஷுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிங்கி இரானி, நடிகை நோரா, அவரின் மைத்துனர் மெக்பூப் பாபி கான் ஆகிய மூன்று பேரையும் நேருக்கு நேர் நிறுத்தி டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னையில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நோரா கலந்துகொண்டார். இதற்காக அவருக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுப்பதாக சுகேஷ் தெரிவித்தார். அதை வாங்க மறுத்த நோரா தன்னுடைய மைத்துனரிடம் கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டார். நோராவின் மைத்துனர் மெக்பூப் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெரும்பாலும் மும்பையில் தங்கியிருந்து பாலிவுட்டில் பணியாற்றிவந்தார். சன்னி லியோன் நடித்த படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார்.

நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அதோடு சுகேஷை ஜாக்குலின், `கனவு நாயகன்’ என்று அழைப்பார் என்றும், அவரையே திருமணம் செய்யவும் நினைத்தார் என்றும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.