Published:Updated:

``துபாய் திரைப்படவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்” - வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் ஜாக்குலின்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளிநாடு செல்லத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

``துபாய் திரைப்படவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்” - வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் ஜாக்குலின்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளிநாடு செல்லத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Published:Updated:
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், டெல்லி தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்து கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புவைத்திருந்ததாகவும், அவரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்கள் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலமுறை விசாரணையும் நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப்பொருள்கள் பெற்றுக்கொண்டதை ஜாக்குலின் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்குச் சொந்தமான 7.27 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியிருக்கின்றனர். அதோடு அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதித்துள்ளனர்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

கடந்த டிசம்பர் மாதம் மும்பை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளில்கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் ஜாக்குலின் இருக்கிறார். இந்நிலையில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துபாயில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதால் 15 நாள்கள் வெளிநாடு சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு செல்லும்போது பிரான்ஸ் மற்றும் நேபாளமும் செல்லவிருப்பதாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார். துபாயில் சர்வதேச திரைப்படவிழா வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இதற்கு பதிலளிக்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டிருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு குதிரை, விலையுயர்ந்த பூனைக்குட்டி , தங்க நகைகள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்திருக்கிறார். அதோடு சென்னையில் தங்கியிருந்த சுகேஷைச் சந்திக்க ஜாக்குலின் பல முறை தனி விமானத்தில் சென்று வந்திருக்கிறார். இருவரும் காதலர்கள் போன்று வாழ்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism