Published:Updated:

பணம் பறிப்பு வழக்கு: நடிகை ஜாக்குலினிடம் இரண்டாவது நாளாக அமலாக்கப் பிரிவு விசாரணை!

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
News
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.

பிரபல தொழிலதிபர் ஒருவரைச் சிறையிலிருந்து ஜாமீனில் எடுப்பதாகக் கூறி, தொழிலதிபரின் மனைவியிடம் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி அளவுக்கு மிரட்டிப் பணம் பறித்திருக்கிறார். தற்போது இந்த வழக்கை அமலாக்கப் பிரிவு விசாரித்துவருகிறது. வழக்கில் சமீபத்தில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ரூ.10 கோடி அளவுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நாள்களில் ஜாக்குலின் வளைகுடா நாடு ஒன்றுக்குச் செல்வதற்காக மும்பை விமான நிலையக்துக்கு வந்தார். ஆனால் அவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி அனுப்பிவைத்தனர்.

ஜாக்குலின்
ஜாக்குலின்

வளைகுடாவில் நடிகர் சல்மான் கானின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் உட்பட பலர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் ஜாக்குலினை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை. அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, புதன்கிழமை ஜாக்குலின் டெல்லியிலிருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று மீண்டும் அவர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் சுகேஷ் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் ஜாக்குலினுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. சுகேஷ் ஜாமீனில் வெளியிலிருந்தபோது, தனி விமானம் ஏற்பாடு செய்து ஜாக்குலினை சென்னைக்கு வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணைக்குப் பிறகே ஜாக்குலின் கைதுசெய்யப்படுவாரா என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz