Published:Updated:

ரூ.37 லட்சம் வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மறுப்பு?! - சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

சோனாக்‌ஷி சின்ஹா
News
சோனாக்‌ஷி சின்ஹா

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

ரூ.37 லட்சம் வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மறுப்பு?! - சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

Published:Updated:
சோனாக்‌ஷி சின்ஹா
News
சோனாக்‌ஷி சின்ஹா

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த பிரமோத் சர்மா என்பவர் 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வைக்க முன்பணமாக ரூ.37 லட்சம் கொடுத்திருந்தார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார் என குற்றம்சாட்டினார். இதனால் பிரமோத் சர்மா தான் கொடுத்த ரூ.37 லட்சத்தை திரும்ப கொடுக்கும்படி சோனாக்‌ஷி சின்ஹாயிடம் கேட்டார். ஆனால் அந்த பணத்தையும் சோனாக்‌ஷி சின்ஹா கொடுக்க மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது. இதனால் சர்மா மொரதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் சோனாக்‌ஷி சின்ஹா மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சோனாக்‌ஷி சின்ஹா நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

சோனாக்‌ஷி சின்ஹா
சோனாக்‌ஷி சின்ஹா

ஆனால் தொடர்ந்து சோனாக்‌ஷி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 25-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் சோனாக்‌ஷி சின்ஹா!

தன் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி புகாரை சோனாக்‌ஷி சின்ஹா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சோனாக்‌ஷி சின்ஹாவை அணுகினார்கள். நிகழ்ச்சிக்கு முன்பாக முழு பணத்தையும் கொடுக்கவில்லை. அதோடு சோனாக்‌ஷி சின்ஹா டெல்லி சென்று வருவதற்கு தேவையான விமான டிக்கெட்களையும் எடுத்து கொடுக்கவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான பணத்தையும், சென்று வருவதற்கான விமான டிக்கெட்டையும் எடுத்து அனுப்பும்படி பல முறை கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் அதனை செய்ய வில்லை.

சோனாக்‌ஷி சின்ஹாயும் அவரின் அணியினரும் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால் பணப்பிரச்னையில் உடன்பாடு எட்டப்படாததால் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். வேறு ஒரு தேதியில் கலந்து கொள்ள சோனாக்‌ஷி சின்ஹாவின் மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தவறான செய்தியை மீடியாவில் வெளியிடுகின்றனர். மீடியாவினர் உண்மை தன்மையை அறிந்து செய்தியை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு நடிகர் சல்மான்கானுடன் திருமணம் முடிந்துவிட்டதாக வதந்தி பரவியது குறிப்பிடதக்கது.