Published:Updated:

இந்தியா: "VIP, VVIP-களின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் தேவை!"- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

பாதுகாப்புப் படை வீரர்கள் ( representational image )

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள விஐபி மற்றும் விவிஐபி-களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் சிறப்பு கவனம் தேவை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் ஆளுங்கட்சியான லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவருமானவர் ஷின்சோ அபே (67). ஜப்பானின் நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமைக்குரிய ஷின்சோ, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரின் பின்புறத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இதயப் பகுதியில் குண்டு ஆழமாகப் பாய்ந்திருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஷின்சோவைத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரைப் பிடித்த பாதுகாப்புப் படையினர், அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாதுகாப்பு மிகுந்த நாடான ஜப்பானில், பட்டப்பகலில் ஒரு முன்னாள் பிரதமர் கொல்லப்பட்ட இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய உள்துறை அமைச்சகம்
இந்திய உள்துறை அமைச்சகம்
Admin

இந்நிலையில் இந்திவியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள விஐபி மற்றும் விவிஐபி-களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றும் விவிஐபிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், பேரணிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுத்து, விவிஐபிகளின் பின்புறமும் அரண் அமைத்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை CRPF, NSG, CISF போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கும், காவல்துறை, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!