Published:Updated:

சுவர் கட்டி குடிசைகள் மறைப்பு... உலகின் பெரிய மைதானம் திறப்பு... ஹவ்டி மோடியைத் தொடர்ந்து `கெம் சோ ட்ரம்ப்'...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ட்ரம்ப் வருகையால் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுவர்
ட்ரம்ப் வருகையால் குடிசைகளை மறைக்க கட்டப்படும் சுவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. `கெம் சோ ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு விசிட் அடிக்கவுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு, ஒபாமா இந்தியா வந்திருந்தார். அதற்குப் பிறகு, டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24, 25 ஆகிய இருநாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தியா வரும் டொனால்ட் ட்ரம்ப் அவரின் மனைவி மெலானியா ஆகியோர் அகமதாபாத் செல்கின்றனர். அங்கு 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில், கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைக்கிறார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைவிட பெரிய மைதானமான இங்கு 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும். முன்னதாக, சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். அகமதாபாத் விமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரை சாலை வழியாக ட்ரம்ப் தம்பதி அழைத்து செல்லப்படுகின்றனர்.

ட்ரம்ப், மெலானியா
ட்ரம்ப், மெலானியா

அப்போது, சாலையின் இரு புறங்களிலும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டு ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். ``இந்திய விசிட் குறித்து தாங்கள் மிக ஆர்வமாக இருப்பதாக மெலேனியா ட்ரம்ப் பதில் ட்வீட் செய்திருக்கிறார். `தான் இதற்கு முன்னதாக இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்தது இல்லை என்றும் உரையாற்றியதும் இல்லை' எனவும் டொனால்ட் ட்ரம்ப் மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹூஸ்டனில் நடந்த `ஹவ்டி மோடி' நிகழ்ச்சி போல சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் `கெம் சோ ட்ரம்ப்' என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. `கெம் சோ' என்றால் `எப்படி இருக்கிறீர்கள் என்று குஜராத்தி மொழியில் அர்த்தம். இந்த நிகழ்ச்சியில் 1. 25 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை வரவேற்க முழு வீச்சில் பணிகள் நடந்துவருகின்றன. பிப்ரவரி 24-ம் தேதி ட்ரம்ப் அகமதாபாத் வருகிறார். விமான நிலையத்திலிருந்து படேல் மைதானத்துக்குச் செல்லும் வழிகளில் உள்ள 500 குடிசை வீடுகளை மறைக்கும் வகையில், பெரிய பெரிய சுவர்களைக் கட்டும் பணியில் அகமதாபாத் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. 7 அடி உயரத்தில் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

நல்ல வேளையாக, குடிசைப் பகுதிகளை இடிக்கவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்வோம். இந்தியாவில் குடிசைகள்தான் அதிகமென்பது உலகின் பணக்கார நாட்டு அதிபருக்குத் தெரியாமல் இருக்காது என்பது வேறு விஷயம். மோடி, ட்ரம்ப் விசிட் அடிக்கும் சபர்மதி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சபர்மதி ஆறு
சபர்மதி ஆறு

ட்ரம்ப்பை வரவேற்க 70 லட்சம் பேர் கூடுவார்கள் என்று மோடி தெரிவித்துள்ளதால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மாணவ-மாணவிகளை அனுப்பி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். அதேபோல், ஆசிரியர்களும் ட்ரம்ப்பை வரவேற்க வர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பாக பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பாக மீண்டும் ட்ரம்ப்பே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டை குறிவைத்து அகமதாபாத்தில் கெம் சோ ட்ரம்ப் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதவிர அமெரிக்க அதிபர்கள் எப்போது இந்தியா வந்தாலும் அதிக தொகையிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ட்ரம்ப்பின் வருகையின்போது, 2.6 பில்லியன் டாலர் தொகைக்கு இருபத்திநான்கு MH-60 ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள், ஆறு அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றின் மதிப்பு 930 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

MH-60 ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள்
MH-60 ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள்

இந்தியப் பணத்தில் இவற்றின் மதிப்பு ரூ. 25,000 கோடி. இந்தத் தொகையை தவணை முறையில் இந்தியா செலுத்தவுள்ளது. முதல் தவணை அளிக்கப்பட்டதும் ஹெலிகாப்டர்கள் படிப்படியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் தற்போது வரை, அமெரிக்காவிடமிருந்து 20 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு இந்தியா ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு