Published:Updated:

`கொரோனாவால் விமான வருவாய் 44 சதவிகிதம் குறையும்..!' - IATA கணிப்பு

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச விமானத்துறையில் 113 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படலாம் என்று IATA மதிப்பிட்டுளளது.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய இழப்பை உண்டாக்கிவருகிறது. வெளிநாட்டுப் பயணங்கள் உலகம் முழுவதிலும் முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் விமானத்துறையின் வருவாய் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், 2020-ல் சர்வதேச விமான வருவாயானது 2019-ம் ஆண்டினைவிட 44% குறையும் எனக் கணிக்கப்படுகிறது.

airways
airways

இதைப் பற்றி சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கங்களின் (International Air Transport Association, IATA) மூத்த பொருளியல் வல்லுநர் ப்ரைன் பியர்ஸ், ``2020-ம் ஆண்டில், 250 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும். இது 2019-ம் ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடும்போது 44% குறைவு'' என்கிறார்.

மேலும் அவர், ``கடந்த பிப்ரவரியில், கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச விமானத்துறையில் 113 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படலாம் என்று IATA மதிப்பிட்டுள்ளது- நாங்கள் அனைத்து நாட்டு அரசுகளிடமும் விமான நிறுவனங்களுக்கு இழப்பினைச் சமாளிக்கும் வகையில் நிதி நிவாரணங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். சில நாடுகள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளூர் சீன சந்தை படிப்படியாக சீரடைந்துவருவது நம்பிக்கையளிக்கிறது. எனினும், விமானப் போக்குவரத்துத்துறை மிகவும் மெதுவாகவே மீண்டுவருகிறது.

விமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும்? என்னவாகும்? #DoubtOfCommonMan

மார்ச் மாதத்தின் குறைவான வருவாயால், பல நிறுவனங்கள் டிக்கெட் விலையில் சலுகைகள் அறிவித்துள்ளன. இதற்கு முன்னதாக விமானத்துறை இழப்பினைச் சந்திக்கும்போதெல்லாம் மூன்றிலிருந்து 4 மாதங்களில் மீண்டுவிடும். தற்போதைய சூழல், முன் எப்போதுமில்லாத உலகளாவிய மந்தநிலையை உருவாக்கியுள்ளது. எனவே, நிலைமை சீரடைய வெகுநாள்கள் தேவைப்படும். 2021-ம் ஆண்டில் மிக வலுவாக மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

IATA வின் இயக்குநர் அலெக்ஸாண்டர் டி ஜுனை, ``தற்போதைய சூழ்நிலையில் விமான நிறுவனங்களுக்கு அரசுகளின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை" என்கிறார்.

COVID-19 தொற்றின் பரவலைத் தடுக்க, இந்தியாவும் தனது அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு