Published:Updated:

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு: ``தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம்" - அல்கொய்தா மிரட்டல்

தீவிரவாதிகள்

``மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்’’ என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு: ``தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம்" - அல்கொய்தா மிரட்டல்

``மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்’’ என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது.

Published:Updated:
தீவிரவாதிகள்

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. மலேசியா, குவைத், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் மொத்தமும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு வளைகுடா நாடுகள் இந்தியப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இந்தப் பிரச்னையால் நுபுர் ஷர்மாவை பாஜக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டது. ஆனாலும் இந்தப் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 1,000 பேருக்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளும் இதில் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அல்கொய்தா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள கடிதத்தில், `முகமது நபியின் கவுரவத்துக்காக நடக்கும் போரில் மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம்.

மிரட்டல் கடிதம்
மிரட்டல் கடிதம்

முகமது நபியை அவமதித்தவர்களைக் கொலை செய்வோம். நமது முகமது நபியை அவமதிக்கத் துணிந்தவர்களின் பட்டாளத்தை அழிப்போம். எங்கள் உடலிலும், எங்கள் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளைக் கட்டுவோம். காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உ.பி மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்குக் காத்திருக்க வேண்டும். நாங்கள் முகமது நபியின் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். மற்றவர்களும் போராடி, தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும்’’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகளின் மிரட்டலால் இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த சர்ச்சைக்கு வித்திட்ட நுபுர் ஷர்மாவுக்குப் பாலியல்ரீதியான மிரட்டலும், கொலை மிரட்டலும் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் அவருக்கு டெல்லி அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. அல்கொய்தாவின் மிரட்டல் கடிதம் சமூக வலைதளத்தில் பரவியிருக்கிறது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குறிப்பிட்ட நகரங்களில் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism