Published:Updated:

ஐஐடி: பட்டியலின மாணவி படிப்புக்கு உதவிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி
News
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி

திட்டமிட்ட தேதிக்குள் அவரால் ரூ.15,000 கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால், ஐஐடி நிர்வாகம் அந்த மாணவியின் சேர்க்கைக்குத் தடைவிதித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த அக்டோபர் 15-ம் தேதி நடந்த நுழைவுத் தேர்வில் எஸ்.சி பிரிவில் 1,469 ரேங்க் பெற்று தேர்ச்சிபெற்றார். அவருக்கு ஐஐடி பம்பாயில் இரட்டைப் பட்டப் படிப்புக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், திட்டமிட்ட தேதிக்குள் அவரால் ரூ.15,000 கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால், ஐஐடி நிர்வாகம் அந்த மாணவியின் சேர்க்கைக்குத் தடைவிதித்ததாகக் கூறப்படுகிறது. ஏழ்மையின் காரணமாக ஐஐடி-யில் சீட் கிடைத்தும், சேர முடியாமல்போன மாணவி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

கல்வி
கல்வி

அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள், மருத்துவச் செலவுகள், அவர் தந்தையின் உடல்நலக் குறைவு, கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மாணவியால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறினர். மேலும், மாணவியின் தந்தை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் உயிர்பிழைக்க வேண்டுமென்றால் வாரம் இரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி

மாணவியின் நிலையை அவரின் வழக்கறிஞர்கள் மூலம் கேட்டறிந்த நீதிபதி தினேஷ், அந்த மாணவியின் மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வு விழுக்காடு விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து , உடனடியாக அவருக்குச் சீட்டு வழங்க ஐஐடி பம்பாய்க்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி தினேஷ், அந்த மாணவிக்குத் தன் சொந்தச் பணத்திலிருந்து ரூ.15,000 நிதியுதவி வழங்கி, அவர் படிப்பைத் தொடர வழிவகுத்தார்.

- கார்த்திகா ஹரிஹரன்

(மாணவப் பத்திரிகையாளர்)