Published:Updated:

சுவாசப் பிரச்னை; வளர்ப்பு நாயை விட மறுத்த மாமியார்- மனஉளைச்சலில் மகளுடன் விபரீத முடிவெடுத்த மருமகள்!

வளர்ப்பு நாய்

நாய் வளர்ப்பது தொடர்பான பிரச்னையில் இளம்பெண் தன் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சுவாசப் பிரச்னை; வளர்ப்பு நாயை விட மறுத்த மாமியார்- மனஉளைச்சலில் மகளுடன் விபரீத முடிவெடுத்த மருமகள்!

நாய் வளர்ப்பது தொடர்பான பிரச்னையில் இளம்பெண் தன் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வளர்ப்பு நாய்

பெங்களூரின், கோவிந்தபுராவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநிவாஸ் (40), திவ்யா தம்பதியினர் (34). இவர்களின் மகள் ரித்யா (14). இவர்கள் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கின்றனர். திவ்யாவுக்கு சுவாச மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக திவ்யா மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவர் திவ்யாவிடம், ``உங்களுக்கு சுவாசப் பிரச்னை உள்ளதால் நாய் வளர்க்க வேண்டாம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

வளர்ப்பு நாய்
வளர்ப்பு நாய்

இதையடுத்து, திவ்யா தன் மாமனார், மாமியாரிடம், ``எனக்கு சுவாசப் பிரச்னை இருப்பதால் நாய் வளர்க்க வேண்டாம். அதை வேறு யாருக்காவது கொடுத்து விடலாம்" எனக் கூறியிருக்கிறார். ஆனால் அவர்களோ, தாங்கள் செல்லமாக வளர்த்த நாயை மற்றவர்களுக்கு கொடுக்க ஒத்துழைக்கவில்லை. மேலும், ``இந்த நாயால் உனக்கு எந்த நோயும் வராது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

தற்கொலை
தற்கொலை

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா, இரவு நேரத்தில் தன்னுடைய மகளைக் கொலைசெய்துவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து பார்த்தபோது தாயும், மகளும் இறந்துகிடப்பது தெரிந்தது. திவ்யாவின் பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பாக கோவிந்தபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

திவ்யாவின் தந்தை போலீஸில், ``திவ்யாவுக்கும் அவர் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, திவ்யா தன்னுடைய மகளுடன் அறைக்குள் சென்றார். பூட்டிவிட்டு வெகுநேரமாகியும் வெளியே வராததால், ஜன்னல் வழியாகச் சோதித்து பார்த்ததில், இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது'' என்றார். அதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யாவின் கணவர் ஸ்ரீநிவாஸ், மாமியார் வசந்த், மாமனார் ஜனார்தன் ஆகியோர்மீது கோவிந்த்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஸ்ரீநிவாஸ் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.