Published:Updated:

`அமேசான் கம்பெனி என்பது கிழக்கிந்திய கம்பெனியின் 2.0 வெர்ஷன்!' - ஆர்.எஸ்.எஸ் பஞ்சஜன்யா இதழ்

அன்று இந்திய கிழக்கிந்திய கம்பெனி இந்திய கலாசாரங்களைச் சிதைத்து, மதமாற்றம் செய்து, இந்தியாவை அடிமைப்படுத்தியது போலவே இன்று அமேசான் நிறுவனமும் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. -பஞ்சஜன்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான `பஞ்சஜன்யா', அமேசான் நிறுவனத்தை கிழக்கிந்திய கம்பெனியின் 2.0 வெரசன் (East India Company 2.0) என விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

பஞ்சஜன்யா
பஞ்சஜன்யா
ட்விட்டர்
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மதிய விருந்து; உறவைப் புதுப்பித்தாரா உத்தவ் தாக்கரே?!

அதில், `அமேசான் நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய சந்தையையும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது. இதற்காக, முதலில் அரசியல், பொருளாதார ரீதியில் இந்தியாவுக்குள் நுழைந்து பின்னர் படிப்படியாக இந்திய மக்களின் தனிநபர் சுதந்திரத்தை பறிப்பது போன்ற திட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, போலியான பிராக்ஸி நிறுவங்களை நிறைய உருவாக்கி, அதன் மூலம் அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தங்களுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்க வழிசெய்யும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறது. இதன் காரணமாகத்தான் பியூச்சர் நிறுவனத்தை வாங்குதில் சட்ட வழக்கு, இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணை போன்றவற்றில் அமேசான் சிக்கியுள்ளது. 2018-2020 ஆண்டுகாலத்தில் மட்டும் அமேசான் நிறுவனம் தங்களை தக்கவைத்துக்கொள்ள சுமார் 8,456 கோடி ரூபாயை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அமேசான்
அமேசான்

இதுமட்டுமல்லாமல், தனது ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் இந்திய கலாச்சாரங்களுக்கு எதிரான வெப்சீரிஸ், திரைப்படங்களை வெளியிட்டுவருகிறது. அன்று இந்திய கிழக்கிந்திய கம்பெனி இந்திய கலாசாரங்களை சிதைத்து, மதமாற்றம் செய்து, இந்தியாவை அடிமைப்படுத்தியது போலவே இன்று அமேசான் நிறுவனமும் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது என்பதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சஜன்யா இதழ், இன்போசிஸ் நிறுவனத்தை வெளிநாட்டு உளவு நிறுவனம் என்று சொல்லி இதேபோல கட்டுரை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு