Published:Updated:

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்த நாடவ் லேபிட்டின் விமர்சனம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேலியத் தூதர்!

இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன்
News
இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்து இஸ்ரேலிய இயக்குநர் பேசியதைக் கண்டித்து அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் ட்வீட் செய்துள்ளார்.

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்த நாடவ் லேபிட்டின் விமர்சனம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேலியத் தூதர்!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்து இஸ்ரேலிய இயக்குநர் பேசியதைக் கண்டித்து அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் ட்வீட் செய்துள்ளார்.

Published:Updated:
இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன்
News
இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன்

53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 9 நாள்கள் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவில் 'ஜெய் பீம்' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் திரையிடப்பட்டன. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய, விருதின் தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவின் இப்படியான மதிப்புமிக்க திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்றதொரு பிரசாரத் தன்மை வாய்ந்த இழிவான இத்திரைப்படத்தைப் பார்த்தது மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் தருகிறது.

 நாடவ் லேபிட்
நாடவ் லேபிட்

இது போன்ற கௌரவமான திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இது இல்லை. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று விமர்சித்திருந்தார்.

நாடவ் லேபிட்டின் இந்த கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோனும் தனது எதிர்ப்பை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும், உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, உங்களுக்குக் கொடுத்த மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றையும் நீங்கள் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்.

மிகப்பெரிய திரைப்பட கலாசாரம் கொண்ட இந்தியா, இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், ஒரு படத்தை விமர்சிக்கும் முன்னால் அது குறித்த வரலாற்று உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு மனிதனாக நான் வெட்கப்படுகிறேன். அவர்களுடைய தாராள மனப்பான்மைக்கும் நட்புக்கும் நாம் திருப்பிச் செலுத்திய மோசமான நடத்தைக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.