Published:Updated:

`பிசினஸ் முதல் பிசிசிஐ வரை...!' - ஜெய் அமித் ஷா பயணம்

தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா
தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா

வாதங்கள் நடக்கும்போது அதே இளைஞர் வழக்கறிஞர்களுக்குப் பின் வரிசையில் அமர்ந்து நீதிபதியைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டு ஹனுமன் மந்திரங்களை உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒரே மகன் ஜெய் ஷா பேசுபொருளாகினார். அதற்கு காரணம் `தி வயர்' ஆங்கில நாளிழிதலில் வந்த கட்டுரை. `தி கோல்டன் டச் ஆஃப் ஜெய் அமித் ஷா’ என்ற தலைப்பைக்கொண்ட அந்தக் கட்டுரையை மேற்கோள்காட்டி `பணம் மதிப்பு நீக்கத்தால் அமித் ஷா குடும்பம் மட்டும்தான் பயனடைந்தது' என்ற ராகுல் காந்தி கருத்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் ஜெய் ஷா மீது விழுந்தது.

ஜெய் ஷா
ஜெய் ஷா

இது நடந்து சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து பிசிசிஐ செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதன் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார் ஜெய் ஷா. பிசிசிஐ பதவி என்பது வாரிசுகளுக்கானது என்பது எழுதப்படாத விதிமுறையாக உள்ளது. அந்தவகையில் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஜெய் ஷாவும் பிசிசியின் பதவியில் அமரவுள்ளார். இவரின் பதவி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் தந்தை அமித் ஷாவைப் போலவே இவரின் வளர்ச்சியும் சர்ச்சைகள் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகின்றன.

ஸ்டாலின் 'வாபஸ்'... அமித் ஷா 'அந்தர்பல்டி'... - இந்தித் திணிப்பு உள்ளரசியல்!

சொஹராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 2010-ம் ஆண்டு சிபிஐ-யினால் கைது செய்யப்பட்டபோது அமித்ஷாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் முன்வரவில்லை. இதனால் மூன்றுமாத சிறைவாசத்துக்கு உள்ளானார் அவர். இந்தக் காலகட்டத்தில் அமித் ஷாவுக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கு நடக்கும்போதெல்லாம் ஜெத்மலானி உடன் எப்போதும் நீதிமன்றத்துக்கு 20 வயது இளைஞர் ஒருவர் வருவார். வாதங்கள் நடக்கும்போது அதே இளைஞர் வழக்கறிஞர்களுக்குப் பின் வரிசையில் அமர்ந்து நீதிபதியைக் கூர்மையாக கவனித்துக்கொண்டு ஹனுமன் மந்திரங்களை உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா
தந்தை அமித் ஷா உடன் ஜெய் ஷா

ஆம்.. அந்த 20 வயது இளைஞர்தான் ஜெய் அமித்பாய் ஷா என ஒரிஜினல் பெயர்கொண்ட ஜெய் ஷா. இவரின் முதல் வெளியுலக வெளிச்சம் இங்கிருந்தே தொடங்குகிறது. இந்த வழக்குக்கு முன் அமித் ஷாவுக்கு நெருங்கியவர்களைத் தவிர ஜெய்யை வெளியுலகுக்குத் தெரியாது. ஒருவழியாக மூன்றுமாத சிறைவாசத்துக்கு குஜராத் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவு அமித் ஷாவுக்குச் சிக்கலை தந்தது. சில காலங்களுக்கு குஜராத்துக்குள் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேறுவழியில்லாமல் டெல்லியில் தங்கியிருந்தார் அமித் ஷா. நீதிமன்ற உத்தரவால் நரன்புரா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த அவரால் தொகுதிக்குள் நுழைய முடியவில்லை.

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!

அப்போது தந்தையின் துயர் துடைக்க வெளிப்படையாகவே களமிறங்கிய ஜெய், நரன்புராவில் தங்கி தொகுதி மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உதவினார். அமித் ஷாவை அரசியல்வாதியாக தெரிந்த அளவுக்கு அவர் பங்குச்சந்தை வணிகத் தொழிலில் கில்லி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 2010ல் அரசியலில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தபோது அந்தத் தொழிலில் சுணக்கம் காட்டினார் அமித் ஷா. கூடவே தங்களது ஃபேமிலி பிசினஸான `பிவிசி பைப்ஸ்' தொழிலிலும் சுணக்கம். அப்போதும் தந்தைக்குத் தோள் கொடுத்தார் `பொறியியல் பட்டதாரி'யான ஜெய். அன்றிலிருந்து தன் தந்தையின் தொழிலைக் கவனிக்கத் தொடங்கினார்.

மோடி உடன் ஜெய் ஷா
மோடி உடன் ஜெய் ஷா

அதன்படி எப்போதும் கையில் மொபைலுடன் ஷேர் மார்க்கெட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெய் குறைவான காலகட்டத்திலேயே தந்தையைப் போலவே பிசினஸில் கொடிகட்டி பறந்தார். அரசியல், தொழில் மட்டுமல்ல குஜராத் கிரிக்கெட் சங்கத்திலும் அப்பாவின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றினார் ஜெய். ஜெய் ஒரு கிரிக்கெட் பிளேயர். சௌராஷ்ட்ராவின் ராஞ்சி அணியில் 110 போட்டிகள் விளையாடியுள்ளதாக அவரே ஒருபேட்டியில் கூறியுள்ளார். ஒரு கிரிக்கெட் பிளேயர் அவ்வளவு சீக்கிரமாக பிசிசிஐயில் பதவியில் அமர்ந்துவிட முடியாது. ஆனால், அது ஜெய் ஷாவுக்கு நடந்தது. 2014ல் மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவரானார் அமித் ஷா.

`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

சில மாதங்களில் பா.ஜ.கவின் தலைவர் பொறுப்பு அமித் ஷாவுக்குக் கிடைக்க இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றான குஜராத் கிரிக்கெட் அசோசியேஷனின் அதிகாரமிக்க இணைச் செயலாளர் பதவி எளிதாக ஜெய் வசம் வந்தது. இந்தப் பதவியிலும் சர்ச்சைகளைச் சந்தித்தார் ஜெய். தொழிலில் கவனம் செலுத்தும் நேரத்தில் கிரிக்கெட் சங்கப் பணிகளை கவனிக்கத் தவறுகிறார் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகளே குற்றம் சாட்டினார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டும் சில மாதங்களில் அமுங்கிப்போனது. இந்தச் சமயத்தில், அவரின் `டெம்பிள் என்டர்பிரைசஸ்' அசுர வளர்ச்சி கண்டது குறித்து `தி வயர்' நாளிதழ் வெளியிட கட்டுரை அதன்பின் ஏற்பட்ட சர்ச்சை மூலம் இந்தியா முழுவதும் தெரிந்தார் ஜெய்.

ஜெய் ஷா
ஜெய் ஷா

இது நடந்து சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்ச்சைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். 2014ல் இருந்து தந்தையின் பக்கபலமாக போன மாதம் வரை குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் கோலோச்சி வந்த ஜெய் தற்போது பிசிசிஐயின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ``நான் சௌராஷ்ட்ராவின் ராஞ்சி அணியில் 110 போட்டிகள் விளையாடியுள்ளேன். நான் பதவிக்கு வரும் போது அது மற்ற வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அப்பா பெயரால் எதுவும் ஆகப்போவதில்லை. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்" என ஸ்டேட்மென்ட் உடன் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், ராஜிவ் சுக்லா சகிதமாக மனுத் தாக்கல் செய்திருக்கும் இவரை எதிர்த்து போட்டியிட இதுவரை மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் பதவி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு 23ம் தேதியே வெளிவரும்.

கடைசி நேர ட்விஸ்ட் - பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?
அடுத்த கட்டுரைக்கு