Published:Updated:

அமிதாப் பச்சனுக்கு நெருக்கமான போலீஸ் கான்ஸ்டபிள் திடீர் சஸ்பெண்ட்! - காரணம் என்ன?

அமிதாப்பச்சனுடன் ஷிண்டே

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் கான்ஸ்டபிள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அமிதாப் பச்சனுக்கு நெருக்கமான போலீஸ் கான்ஸ்டபிள் திடீர் சஸ்பெண்ட்! - காரணம் என்ன?

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் கான்ஸ்டபிள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Published:Updated:
அமிதாப்பச்சனுடன் ஷிண்டே

நடிகர் அமிதாப் பச்சனுக்கு அரசு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இதனால் இரண்டு ஷிஃப்டுகளில் தலா இரண்டு போலீஸார் அமிதாப்பச்சனுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அப்படி பாதுகாப்புக்கு கொடுக்கப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு கான்ஸ்டபிள் ஜிதேந்திர ஷிண்டே என்பவர் நியமிக்கப்பட்டார். ஷிண்டே நாளடைவில் அமிதாப் பச்சனுக்கு மிகவும் வேண்டப்பட்ட பாதுகாவலராக மாறிவிட்டார். அமிதாப் பச்சன் மூலம் பாலிவுட் பிரபலங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட ஷிண்டே, சொந்தமாக தன் மனைவி பெயரில் செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கினார். தனது செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் அமிதாப் பச்சன் மட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்களுக்கும் ஷிண்டே பாதுகாப்பு கொடுத்து வந்தார். அதோடு அவர் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென ஷிண்டே அமிதாப் பச்சனின் பாதுகாப்பு பணியிலிருந்து இடமாறுதல் செய்யப்பட்டார். அதோடு ஷிண்டே மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் உத்தரவிட்டு, அதற்காக கமிட்டி ஒன்றையும் அமைத்தார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

தற்போது ஷிண்டே மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருப்பதால் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில், ``ஷிண்டே தன் மனைவி பெயரில் செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கி அமிதாப் பச்சனுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார். அதோடு வேறு பாலிவுட் பிரபலங்களுக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணத்தை அதிகமான நேரங்களில் தன் மனைவி பெயரில் வாங்காமல் தன் பெயரில் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் துபாய், சிங்கப்பூருக்கு 4 முறை சென்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மும்பையில் சொத்துகளை வாங்கி விற்கும் தொழிலையும் செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்