Published:Updated:

`வெயில் தாங்க முடியல' ஹெல்மெட்டில் சோலார் மின் விசிறியை வடிவமைத்து வியாபாரம் செய்யும் முதியவர்

மின் விசிறியுடன் ஹெல்மெட்

உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவர் ஹெல்மெட்டுடன் கூடிய சோலார் மின்விசிறியை பொருத்திக்கொண்டு தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

`வெயில் தாங்க முடியல' ஹெல்மெட்டில் சோலார் மின் விசிறியை வடிவமைத்து வியாபாரம் செய்யும் முதியவர்

உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவர் ஹெல்மெட்டுடன் கூடிய சோலார் மின்விசிறியை பொருத்திக்கொண்டு தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

Published:Updated:
மின் விசிறியுடன் ஹெல்மெட்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெஹ்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லல்லுராம் (77). இவர் தினமும் தெருத்தெருவாக சென்று பூமாலைகள் விற்பனை செய்வர். அப்படி விற்பனை செய்யும் போது கடுமையான வெயில் காரணமாக அவரால் அதிக நேரம் தெருவில் நடக்க முடியவில்லை. இதனால் அவரால் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே இதிலிருந்து தப்பிக்க லல்லுராம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். சிறிய மின் விசிறியை தனது தலையில் கட்டிக்கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பிவிட்டார். அதாவது தனக்குக் கிடைத்த பொருட்களை கொண்டு ஹெல்மெட்டுடன் கூடிய சிறிய சோலார் மின் விசிறியை உருவாக்கிவிட்டார்.

தலையில் சோலார் தகடு
தலையில் சோலார் தகடு

பூ வியாபாரத்திற்கு செல்லும்போது இந்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொள்கிறார். மின் விசிறி அவரது முகத்தை நோக்கி இருக்கிறது. தலையின் பின் புறம் சோலார் தகடு இருக்கிறது. இது குறித்து லல்லுராம் கூறுகையில், ``கடுமையான வெயில் காரணமாக என்னால் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். தற்போது நான் உருவாக்கியிருக்கும் மின் விசிறி என்னை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர்களிடமிருந்து தேவையான பொருட்களை வாங்கி இந்த மின் விசிறியைத் தயாரித்திருக்கிறேன். இதற்கான பொருட்களை கடையில் வாங்க என்னிடம் பணம் இல்லை" என்று தெரிவித்தார். தற்போது லல்லுராம் தெருக்களில் வியாபாரம் செய்ய வந்துவிட்டால் அவரை அனைவரும் அதிசயமாக பார்க்கின்றனர்.