Published:Updated:

இரண்டு நாள்களாக போனை எடுக்காத மகன்; வயதான தம்பதிக்கு உதவிய உணவு டெலிவரி ஏஜென்ட் - நெகிழ்ச்சிக் கதை!

Online Food Delivery ( Representational Image )

உணவு டெலிவரி ஏஜெண்டாக இருக்கும் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த் என்பவர் ஒரு வயதான தம்பதியரின் மகனைக் கண்டுபிடிக்க உதவிய நெகிழ்ச்சிக் கதை இது.

இரண்டு நாள்களாக போனை எடுக்காத மகன்; வயதான தம்பதிக்கு உதவிய உணவு டெலிவரி ஏஜென்ட் - நெகிழ்ச்சிக் கதை!

உணவு டெலிவரி ஏஜெண்டாக இருக்கும் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த் என்பவர் ஒரு வயதான தம்பதியரின் மகனைக் கண்டுபிடிக்க உதவிய நெகிழ்ச்சிக் கதை இது.

Published:Updated:
Online Food Delivery ( Representational Image )
உணவு டெலிவரி வேலை செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் பலவிதமான குணங்கள் கொண்ட வாடிக்கையாளர்களைச் சந்தித்தது வருகின்றனர். அவர்களின் இந்த டெலிவரி பயணத்தில் நல்ல அனுபவங்களும், மோசமான அனுபவங்களும் நிறையவே இருக்கும். அந்த வகையில் ஸ்விகி டெலிவரி ஏஜெண்டாக இருக்கும் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த் என்பவர் சந்தித்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்தான் இது.

சென்னையில் வசிக்கும் அந்த வயதான தம்பதியினர் வருத்தத்திலிருந்தனர். காரணம், ஹைதராபாத்தின் செகந்திராபாத் பகுதியில் இருக்கும் தங்கள் மகன் (பெயர் குறிப்பிடவில்லை) இரண்டு நாள்களாக போன் செய்தும் எடுக்கவேயில்லை. இதனால் மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் அந்த வயதான தம்பதியினர் அச்சமடைந்துள்ளனர். பின்னர், இது பற்றித் தெரிவிக்க பெங்களூரில் வசிக்கும் தங்கள் உறவினரான சாய்கிரண் என்பவரின் அம்மாவைத் தொடர்பு கொண்டுள்ளனர். இதை அறிந்த சாய்கிரணின் அம்மா அந்த வயதான தம்பதியினருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

Food Delivery
Food Delivery

இதையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் மகனைத் தொடர்பு கொள்வதற்காகப் புத்திசாலித்தனமாக யோசித்த சாய்கிரணின் அம்மா, 'Swiggy Instamart' என்ற உணவு டெலிவரி செய்யும் ஆப் மூலம் செகந்திராபாத்தில் உள்ள அந்த மகனின் வீட்டு முகவரிக்கு உணவு ஆர்டர் செய்யலாம், அப்போது அவர் அந்த உணவைப் பெற்றுக்கொண்டால் அதன் மூலம் அவர் நலமாக இருக்கிறார் என்று அறிந்துகொண்டு உணவு டெலிவரி ஏஜென்ட் மூலம் அவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி அந்த வயதான தம்பதியிடம் அவரது மகனின் வீட்டு முகவரியை வாங்கிய சாய்கிரணின் அம்மா, அவரது முகவரிக்கு பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரை டெலிவரி செய்யச் சென்ற ஸ்விகி டெலிவரி ஏஜென்ட் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த் என்பவர் வெகு நேரமாகத் தேடியும் முகவரி சரியாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை என்று சாய்கிரணின் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சாய்கிரணின் அம்மா, சரிபரவாயில்லை ஆர்டர் செய்த பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்விகி டெலிவரி ஏஜென்ட் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்திடம் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் சாய்கிரணின் அம்மா, அந்த வயதான தம்பதியரிடம் முகவரி தவறாக உள்ளது என்பதைத் தெரிவித்து அவரது மகனின் நண்பரைத் தொடர்பு கொண்டு சரியான முகவரியை வாங்கியுள்ளார். அதன்பின் சரியான முகவரிக்கு டெலிவரி செய்ய டெலிவரி ஏஜென்ட் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்தச் சமயத்தில் அவருக்கு வேறொரு ஆர்டரை டெலிவரி செய்யவேண்டியிருந்ததால் அதை முடித்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். பின்னர் தனது வேலையை முடித்துவிட்டு சிறிது நேரம் சென்றபின் மீண்டும் தொடர்பு கொண்டு மகனின் முகவரியை வாங்கியுள்ளார் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்த்.

Online Food Delivery
Online Food Delivery

இந்த முறை சரியான முகவரி என்பதால் டெலிவரி ஏஜென்ட், வயதான தம்பதியரின் மகன் இருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறி அவரிடம் அலைபேசியைக் கொடுத்து அவரது பெற்றோரான அந்த வயதான தம்பதியிடம் பேசுமாறு கூறியுள்ளார். செகந்திராபாத்தில் இருக்கும் அவருக்கு சில தினங்களுக்கு முன் ஒரு விபத்தில் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால், இந்த விஷயம் தெரிந்தால் அவரது பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று அவர்களது அழைப்பை எடுக்கவில்லை என்றும் விளக்கமளித்தார் அந்த மகன்.

இதையடுத்து தனது மகனைக் கண்டுபிடிக்க உதவிய டெலிவரி ஏஜென்ட் ஸ்ரீநாத் ஸ்ரீகாந்திற்கு அந்த வயதான தம்பதிகள் நன்றி கூறியுள்ளனர். அதன்பிறகு டெலிவரி ஏஜென்ட், ஆர்டர் செய்த பொருளை அவரது மகனிடம் கொடுத்துவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்றுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சாய்கிரண், அவரது அம்மா அந்த டெலிவரி ஏஜென்ட்டிற்கு நன்றி கூறியதாகவும், தன் பணியையும் தாண்டி ஒரு பெரும் உதவியைச் செய்ததால், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக GPay மூலம் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட ஸ்விகி நிறுவனம் 'Swiggy Cares' என்ற தங்களது ட்விட்டர் கணக்கில் இதைப் பகிர்ந்து, சாய்கிரணின் தாயாரின் மன உறுதியையும், அவர்களின் டெலிவரி பார்ட்னரின் சமூகப் பொறுப்பையும் பாராட்டுவதாகப் பதிவிட்டுள்ளது.