Published:Updated:

``பிரிட்டிஷ் வரலாறு படித்த நான் சோழ வரலாறு பற்றி படிக்கத் தவறிவிட்டேன்" -ஆனந்த் மஹிந்திரா!

பொன்னியின் செல்வன் ஆனந்த் மஹிந்திரா

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் சோழ வரலாறு குறித்து நேற்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டடிருந்தார்.

``பிரிட்டிஷ் வரலாறு படித்த நான் சோழ வரலாறு பற்றி படிக்கத் தவறிவிட்டேன்" -ஆனந்த் மஹிந்திரா!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் சோழ வரலாறு குறித்து நேற்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டடிருந்தார்.

Published:Updated:
பொன்னியின் செல்வன் ஆனந்த் மஹிந்திரா
சோழ வரலாற்றை அடிப்டையாகக் கொண்டு 1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற அதே பெயரில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் இன்று (செப்டம்பர் 30ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் வெளியீட்டையொட்டி தமிழகம் அறிந்த சோழ வரலாறு குறித்து இந்தியா முழுவதும் உள்ள ஊடங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'The Better India' என்ற செய்தி நிறுவனம் "சோழப் பேரரசு பிரிட்டனை விட 5 மடங்கு அதிக பரப்பளவிலான நிலத்தை ஆட்சி செய்தது. மேலும் உலகின் மிக நீண்ட ஆட்சி வம்சங்களில் ஒன்றாக, அசோகரின் மௌரியப் பேரரசை விஞ்சியிருந்தது" என்று 'Who Were the Cholas, One of the World’s Longest-Ruling Dynasties' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, "நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றி அதிகக் கல்வி பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவன். இந்த அசாத்தியமான சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி சினிமா மூலமும், தரவுகள் மற்றும் தகவல்கள் மூலமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டை, ரீ- ட்விட் செய்து ``பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.