Published:Updated:

"இரு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் இவர்தான்"- முன்னாள் மத்திய அமைச்சரைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

எம்.டி. மிசிசிப்பி மேடையில் கிட்டார் வாசித்தவாறு ப்ளூஸ் பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா...

"இரு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் இவர்தான்"- முன்னாள் மத்திய அமைச்சரைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

எம்.டி. மிசிசிப்பி மேடையில் கிட்டார் வாசித்தவாறு ப்ளூஸ் பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா...

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமீபகாலங்களாக சமூக நிகழ்வுகள் சார்ந்த தன் கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அண்மையில் உக்ரைன் சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவிலிலேயே கல்லூரி அமைக்க வேண்டும் என்று `நம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் நிலையை மாற்றவேண்டும். தனியார் நிறுவனங்கள் நம் நாட்டில் மருத்துவக் கல்லூரி அமைக்க முன் வரவேண்டும்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து பிரதமர் மோடிக்கு அழைப்பும் விடுத்திருந்தார். அவரது இந்த ட்வீட் பலராலும் பாரட்டப்பட்டது. இதையடுத்து தற்போது காங்கிரஸ் தலைவரான மிலிந்த் முரளி தியோராவைப் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சருர் மிலிந்த் முரளி தியோரா, எம்.டி. மிசிசிப்பி மேடையில் கிட்டார் வாசித்தவாறு ப்ளூஸ் பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, ‘உலகிலேயே அரசியல்வாதி மற்றும் இசைக் கலைஞர் என இரு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் இவர்தான்’ எனப் பாராட்டியுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட் 70000 பார்வையாளர்களைக் கடந்து 1484 லைக்குகளை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism