Published:Updated:

1 டன் மீன், 200 கி இறால், 10 ஆடு, 1000 கி காய்கறி; வண்டி வண்டியாக சீர் அனுப்பிய ஆந்திர மாமனார்!

சீர் வரிசைப் பொருள்கள்
சீர் வரிசைப் பொருள்கள்

1,000 கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 1,000 கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புப் பலகாரங்கள் என மருமகனுக்கு வண்டி வண்டியாக சீர் கொடுத்திருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த மாமனார் ஒருவர்.

புதுமணத் தம்பதிகளுக்கு, தமிழர்கள் ஆடி மாதம் சீர் கொடுத்துக் கொண்டாடுவதைப்போல், தெலுங்கு பேசும் மக்களும் ஆண்டுதோறும், தெலுங்கு மாதமான `ஆஷாதம்' விழாவைச் சிறப்பிக்கிறார்கள். இதனை, `பொனாலு’ என்கிற பாரம்பர்ய நாட்டுப்புற விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திலும் `ஆஷாதம்’ விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

சீர் வரிசைப் பொருட்கள்
சீர் வரிசைப் பொருட்கள்
`நகைகளை உன் பெற்றோரிடமே கொடுத்துவிடு!' - கேரள மணமக்களின் வரதட்சணை மறுப்பு திருமணம்

இவ்விழாவையொட்டி, ஏனாமைச் சேர்ந்த பவண்குமார் என்பவருக்கு, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரின் மாமனார் பத்துலா பலராம கிருஷ்ணா, வண்டி வண்டியாக சீர் கொடுத்துள்ளார். பவண்குமாருக்கும், பலராம கிருஷ்ணாவின் மகள் பிரத்யுஷாவுக்கும் கடந்த மாதம் 21-ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், 1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், 1,000 கிலோ காய்கறிகள், 250 கிலோ மளிகைப்பொருள்கள், 250 வகையான ஊறுகாய், 50 வகையான இனிப்பு வகைகள் என இன்னும் பலவிதமான பொருள்களை வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் எடுத்து வந்து மருமகன் வீட்டில் கொடுத்துள்ளனர் கிருஷ்ணா வீட்டினர்.

Marriage - Representational Image
Marriage - Representational Image
Photo: LVR சிவக்குமாா்

வரதட்சணை, சீர்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இதுபோன்ற பழக்கங்கள் இன்னொரு பக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு