Published:Updated:

`கொரோனா அச்சம்; மதிய உணவுடன் வீட்டுக்குச்சென்ற ஆசிரியர்; குழந்தையின் சிரிப்பு'- வைரலாகும் புகைப்படம்

ஆசிரியர் மற்றும் சிறுவன்
ஆசிரியர் மற்றும் சிறுவன் ( மனோரமா )

``புகைப்படத்தில் குழந்தையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. விலைமதிப்பற்ற புகைப்படம். என்னை இதமாக உணரச்செய்கிறது" போன்ற கமெண்டுகளைப் பதிவு செய்து பகிர்ந்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகபடியாக கேரளாவில் 19 பேர் வரை பாதிக்கப்படுள்ளனர். இந்த நிலையில், கேரள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, மனோரமா பத்திரிகையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மதிய உணவு திட்டம் குறித்த அரசு வெளியிட்டுள்ள போஸ்டர்
மதிய உணவு திட்டம் குறித்த அரசு வெளியிட்டுள்ள போஸ்டர்
Facebook

கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி நிலையங்கள் உட்பட பொதுமக்கள் கூடும் பல பகுதிகளையும் மூட பிரணாயி விஜயன் அரசு உத்தரவிட்டது. அங்கன்வாடிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் மதிய உணவு திட்டங்களை நம்பி இருப்பதால், மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அவர்களது வீட்டுக்கே சென்று வழங்குமாறு மாநில அரசு கூறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை கேரள சட்டசபையில் எடுத்துள்ளனர். இதனால், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் உணவுகளைச் சமைத்து தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவை வழங்கி வருகிறது.

`அம்னீசியா; கொரோனா செய்தி; 30 வருடங்களுக்குப் பிறகு நினைவுக்கு வந்த ஊர்!'- சீனாவை நெகிழவைத்த சம்பவம்

இந்த நிலையில், அங்கன்வாடி ஆசிரியர் ஒருவர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தன் மாணவரின் வீட்டுக்குச் சென்று உணவை வழங்கி, அந்தச் சிறுவனை செல்லமாகத் தூக்கி உரையாடுகிறார். சிறுவனும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாகத் தனது அங்கன்வாடி ஆசிரியருடன் பேசுகிறார். இதை மனோரமாவைச் சேர்ந்த ஜின்ஸே மைக்கேல் என்பவர் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளார். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருக்கும் அந்த அழகான தருணத்தை விளக்கும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரிலும் பதிவு செய்துள்ளனர்.

``புகைப்படத்தில் குழந்தையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. விலைமதிப்பற்ற புகைப்படம். என்னை இதமாக உணரச் செய்கிறது" போன்ற கமெண்டுகளைப் பதிவு செய்து பகிர்ந்து தங்களது பாராட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 3,500-க்கும் அதிகமானவர்கள் அரசின் தொடர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளுக்கும் கேரள அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் அவர்களுக்கு விருப்பமான உணவை அரசு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் தங்களது மன அழுத்ததைக் குறைக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`கொரோனா பீதியால் ஒரு ரூபாய்க்குப் பிரியாணி!' - 2 மணி நேரத்தில் காலியான 120 கிலோ சிக்கன்
அடுத்த கட்டுரைக்கு