Published:Updated:

ஆர்யன் கானைக் கைதுசெய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம்! - அதிரடி நடவடிக்கை

சமீர் வான்கடே

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கைச் சரியாக விசாரிக்காத போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்யன் கானைக் கைதுசெய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம்! - அதிரடி நடவடிக்கை

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கைச் சரியாக விசாரிக்காத போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
சமீர் வான்கடே

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டனர். மும்பை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய சமீர் வான்கடேதான் சொகுசுக் கப்பலில் ரெய்டு நடத்தி, அவர்களைக் கைதுசெய்தார். இந்த வழக்கை ஆரம்பத்தில் சமீர் வான்கடே விசாரித்தார். ஆனால் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். மும்பையில் வருவாய் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன் கான் உட்பட ஆறு பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த சமீர் வான்கடே இதை சரியாக விசாரிக்காத காரணத்தால்தான் ஆர்யன் கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரெய்டின்போது வீடியோ எடுக்கவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதோடு மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளும் சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வுப் பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி, மிகவும் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது. தண்டனைப் பணியாகவே இந்தப் புதிய வேலை கருதப்படுகிறது.

சமீர் வான்கடே ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் மிரட்டிப் பணம் கேட்டதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு தாழ்த்தப்பட்ட பிரிவில் வேலை பெற சாதிச்சான்றிதழில் முறைகேடு செய்ததாகவும் சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும் மத்திய அரசு விசாரித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism