Published:Updated:

`பாலியல் வன்கொடுமைக்குத் தூக்கு!' - திஷா பெயரில் ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ஆந்திராவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

திஷா பெயரில் மசோதா நிறைவேற்றிய ஜெகன் மோகன்
திஷா பெயரில் மசோதா நிறைவேற்றிய ஜெகன் மோகன்

கடந்த சில நாள்களுக்கு முன்பு, தெலங்கானாவில் திஷா என்ற இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாலியல் குற்றங்களைத் தடுக்க தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆந்திர சட்டசபையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆந்திர சட்டமன்றம்
ஆந்திர சட்டமன்றம்

இது தொடர்பான மசோதா நேற்று ஆந்திர சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தெலங்கானாவில் கொல்லப்பட்ட பெண் திஷாவின் பெயரே சூட்டப்பட்டது. திஷா மசோதாவுக்கு ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி, கொடிய பாலியல் வன்கொடுமை சட்டங்களுக்கு 21 நாள்களில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுவிடும்.

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

விசாரணை 7 நாள்களில் நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தில் 14 நாள்களில் வழக்கு முடிக்கப்பட்டு விடும். குற்றத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு தூக்குத் தண்டனையும் விதிக்கப்படும். மொத்தத்தில் 21 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

Representational Image
Representational Image

இந்தச் சட்டம் குறித்து ஆந்திர சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி,``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி குறையும் என்று நம்புகிறேன். மது குடிப்பது மற்றும் ஆபாசப்படங்கள் பார்ப்பது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெற முக்கியக் காரணங்களாக உள்ளன. ஆபாசப்படங்களைத் தடை செய்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. மக்கள் அவற்றைப் பார்ப்பதைக் குறைக்க வேண்டும். விரைவில் இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் தெலங்கானாவில் திஷா கொல்லப்பட்ட சம்பவத்தால் சமூகமே வெட்கித் தலைகுனிகிறது ''என்றார்.