Published:Updated:

`இது லிஸ்ட்லயே இல்லையே!' தாஜ்மஹாலுக்குச் சொத்து வரி, தண்ணீர் வரி நோட்டீஸ் - அதிர்ச்சியில் நிர்வாகம்!

தாஜ்மஹால்

சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

`இது லிஸ்ட்லயே இல்லையே!' தாஜ்மஹாலுக்குச் சொத்து வரி, தண்ணீர் வரி நோட்டீஸ் - அதிர்ச்சியில் நிர்வாகம்!

சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Published:Updated:
தாஜ்மஹால்

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து ரசித்துச் செல்லக்கூடிய தாஜ்மஹால் நினைவுச் சின்னத்துக்குச் சொத்துவரி மற்றும் தண்ணீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மஹால் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தண்ணீர் வரியாக ரூ.19 கோடியும், சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் செலுத்துமாறு இந்தியத் தொல்லியல் துறைக்கு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாள்களில் வரியைச் செலுத்தாவிட்டால்  தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாஜ்மஹால்
தாஜ்மஹால்

இது குறித்துப் பேசிய, இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பு  ஆய்வாளர் ராஜ்குமார் படேல், “நினைவுச் சின்னங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாது. வணிகரீதியாகப் பயன்படுத்தப்படாத தண்ணீருக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. தாஜ்மஹால் வளாகத்துக்குள் பசுமையைப் பராமரிக்க மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தாஜ்மஹாலுக்கான தண்ணீர் மற்றும் சொத்துவரி முதல்முறையாக விதிக்கப்பட்டுள்ளது. இது தவறுதலாகக் கூட அனுப்பப்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே பேசுகையில், "தாஜ்மஹால் வரி தொடர்பான நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆக்ரா முழுவதும் புவியியல் தகவல் அமைப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில், வரிகளை கணக்கிடுவதற்காக புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், அரசு கட்டடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் உள்ள வரித் தொகையைக் கணக்கிட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால்

இது தொடர்பாகப் பேசிய ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா, "தாஜ்மஹால் மத்திய அரசின் சொத்து மற்றும் உலக பாரம்பரிய சின்னம். ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் ஏன் தாஜ்மஹால் நினைவுச்சின்னத்திற்கு வரி வசூலிப்பு அறிவிப்பை வழங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் கூட தாஜ்மஹாலை வீட்டு வரியின் கீழ் கொண்டு வந்ததில்லை. இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்பதை ஆக்ரா மேயர் விளக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.