Published:Updated:

50 மணிநேரம்; 350 கி.மீ; தேசிய கொடியுடன் தில்லிக்கு ஓடி வந்த ராஜஸ்தான் இளைஞர்! பின்னணி இது தான்.

சுரேஷ் பிச்சார்

ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ் பிச்சார் என்ற இளைஞர் 50 மணிநேரம் 350 கிலோமீட்டர் பயணித்து ராஜஸ்தானிலிருந்து தில்லி வந்துள்ளார்.

50 மணிநேரம்; 350 கி.மீ; தேசிய கொடியுடன் தில்லிக்கு ஓடி வந்த ராஜஸ்தான் இளைஞர்! பின்னணி இது தான்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ் பிச்சார் என்ற இளைஞர் 50 மணிநேரம் 350 கிலோமீட்டர் பயணித்து ராஜஸ்தானிலிருந்து தில்லி வந்துள்ளார்.

Published:Updated:
சுரேஷ் பிச்சார்

இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரி அல்லாத பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. இது பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து வருவதாகவும் குறிப்பாக வயதான விண்ணப்பதாரர்களுக்கு வயது அதிகரித்து வருவதால் அவர்கள் வயது வரம்பை மீறி விடுவார்கள். எனவே தாமதிக்காமல் விரைவில் ஆட்சேர்ப்புக் குறித்து பரிசீலிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதையடுத்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சுமார் ஆயிரம் பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பிச்சார் என்ற 24 வயது இளைஞன், கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி ராஜஸ்தானில் உள்ள ஷிகர் (Sikar) என்ற நகரிலிருந்து தில்லி வரை சுமார் 50 மணிநேரம் 350 கிலோமீட்டர் பயணித்து ராணுவத்தில் சேர விரும்பும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொடியுடன் வந்த நபர்
கொடியுடன் வந்த நபர்

இது பற்றி விவரித்த அவர், "நான் இந்திய ராணுவத்தில் சேர்வதில் ஆர்வமாக உள்ளேன். 2 ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. இதனால் நாகூர்(Nagaur), சிகார்(Sikar) மற்றும் ஜுன்ஜுனு(Jhunjhunu) நகரைச் சேர்ந்த இளைஞர்கள் வயதாகி வருகின்றனர்." என்று கூறினார். மேலும் தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறிய சுரேஷ் பிச்சார், "நம் நாட்டு இளைஞர்களின் உற்சாகத்தை அதிகரிக்கவே நான் டெல்லிக்கு ஓடி வந்துள்ளேன்" என்று உற்சாகத்துடன் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism