Published:Updated:

ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 2 வயது ராணுவ நாய் வீர மரணம்!

அக்ஸெல்

மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அக்ஸெல் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 2 வயது ராணுவ நாய் வீர மரணம்!

மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அக்ஸெல் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

Published:Updated:
அக்ஸெல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்திலுள்ள வனிகம் என்ற கிராமத்தில் ஒரு பாகிஸ்தானியர் உட்பட மூன்று தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக இந்திய ராணுவத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்திய ராணுவம், மறைந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். இதில் தீவிரவாதிகள் தங்கியிருக்கும் இடத்தைக் கண்காணிக்க பஜாஜ் மற்றும் இரண்டு வயது 'அக்ஸெல் (Axel)' என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் எனும் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் இந்த நாயின் மீது கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி தீவிரவாதிகளின் தங்குமிடத்தைக் கண்காணித்து வந்தனர். இந்தச் சூழலில் கடந்த ஜூலை 30-ம் தேதி இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

சுமார் எட்டு மணி நேரமாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அக்ஸெல் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த அக்ஸெலின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஜெனரல் அதிகாரி (ஜி.ஓ.சி) மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.ஸ்லாரியா, அக்ஸெல் உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய ராணுவம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’உனது சேவைக்கு நன்றி!’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!