Published:Updated:

தாக்கிய ராணுவ அதிகாரி; நீதிமன்றத்தை நாடிய உணவு டெலிவரி ஊழியர்! - என்ன நடந்தது?

உணவு டெலிவரி ஊழியர் ( சித்திரிப்புப் படம் )

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய ராணுவ அதிகாரிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தாக்கிய ராணுவ அதிகாரி; நீதிமன்றத்தை நாடிய உணவு டெலிவரி ஊழியர்! - என்ன நடந்தது?

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய ராணுவ அதிகாரிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
உணவு டெலிவரி ஊழியர் ( சித்திரிப்புப் படம் )

ஹரியானா மாநிலத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் அவர் வசிக்கும் குடியிருப்பில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய சோனு குமார் (28 வயது) என்ற உணவு டெலிவரி ஊழியரை தாக்கியது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவுசெய்ய காவல்துறைக்கு நீதீமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஹரியானாவின் செக்டார் 81-ல் உள்ள பெஸ்டெக் பார்க் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில், உணவு ஆர்டரை வழங்குவதற்காக சோனு குமார் சென்றிருக்கிறார். அங்கு குடியிருப்போருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் தனித் தனியாக லிஃப்ட் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், வாசலில் இருந்த காவலாளிக்கும், சோனு குமாருக்கும் இடையே லிஃப்டை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

நீதிபதி
நீதிபதி

இந்த நிலையில், ராணுவ அதிகாரி காவலாளியிடம் சென்று என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார். காவலாளி நடந்ததைக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு கோபமடைந்த ராணுவ அதிகாரி, உணவு டெலிவரி ஊழியர் சோனு குமாரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதனால் சோனு குமார் காதில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அவர் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இடது காதில் ஒரு பகுதி கேட்கும் திறனை இழந்துவிட்டது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சோனு குமார் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், ``சோனு குமார் கொரோனா விதிமுறைகளை மீறினார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் முகக்கவசம்கூட அணியவில்லை. நான் அவரை அறையவில்லை" என ராணுவ அதிகாரி கூறியிருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

இந்த விவகாரத்தில் போலீஸார் குற்றம்சாட்டப்படும் நபர் ராணுவ அதிகாரி என்பதால் அவர்மீது வழக்கு பதிவுசெய்ய தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட உணவு டெலிவரி ஊழியர் மாவட்ட நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``ராணுவ வீரராக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு. உணவு டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டதில் அவர் காது பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, குற்றம்சாட்டப்படும் ராணுவ அதிகாரிமீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காவல்துறைக்கு உத்தரவிட்டது.