Published:Updated:

கிழக்கு லடாக் பகுதி; மைனஸ் 40 டிகிரி! - எல்லையில் குளிர்காலத்துக்குத் தயாராகும் இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்
கிழக்கு லடாக்

டி-90 மற்றும் டி 72 டாங்க்குகள் உள்ளிட்ட சில ராணுவ பீரங்கிகளை வரிசைப்படுத்தும் இந்தியா, குளிர்கால காண்காணிப்புக்குத் தயாராகிவருகிறது.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை பல காலமாக நீடித்துவந்தாலும், கடந்த சில மாதங்களாக எல்லையில் அதிக பதற்றம் நிலவிவருவது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. அதேநேரத்தில், எல்லையில் கண்காணிப்பும் அதிகரித்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்திலும், சில இடங்களில் அத்துமீறல்களும் நடைபெற்றன.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

கடந்த மே மாதம் தொடங்கி, ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இந்தப் பதற்றமான சூழல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் லடாக் எல்லையின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அந்தப் பகுதிகளில் படைகளையும், முன்னெச்சரிக்கையாக ஆயுதங்களையும் சேமித்து, தன் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இந்தியா.

`லடாக் எல்லையில் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிடும் சீன ராணுவம்!’ - ஏன் தெரியுமா?

குளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக்கோடு அருகே, இந்திய ராணுவம் தனது படைகள் மற்றும் டாங்க்குகளை வரிசைப்படித்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. டி-90 மற்றும் டி 72 டாங்குகள் உள்ளிட்ட சில ராணுவ பீரங்கிகளை வரிசைப்படுத்தும் இந்தியா, குளிர்கால காண்காணிப்புக்குத் தயாராகிவருகிறது. குறிப்பிட்ட இந்த இடத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தின் உச்சத்தில், இரவு நேரங்களில் மைனஸ் 30 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சாதாரணமாகவே பதிவாகும். அதனுடன் அதிக வேகத்தில் காற்றும் வீசும். அதனால் இந்திய ராணுவம் மைனஸ் 40 டிகிரி வெப்பநிலையிலும் தன் பணியைச் செய்யும் காலாட்படை போர் வாகனங்களை வரிசைப்படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டுவருகிறது.

கிழக்கு ல்டாக் பகுதியில் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு உச்சகட்ட குளிர் நிலவும் என கணிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர், ``டாங்க்குகளையும் போர் வாகனங்களையும் இந்தப் பகுதியில் பராமரிப்பது மிகவும் கடுமையான சவால். லடாக்கில் குளிர்காலம் கடுமையாக இருக்கும். குளிர்காலத்துக்கான இருப்பைப் பொறுத்தவரை அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதிக கலோரி மற்றும் சத்தான உணவு, எரிபொருள் மற்றும் எண்ணெய், குளிர்கால ஆடை மற்றும் வெப்பமூட்டும் உபகரணங்கள் என அனைத்தும் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றன” என்றார். குளிர்காலத்தில் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன. எனினும், சீனா தன் படைகளை அதிகரித்தால், இந்தியாவும் அதிகரிக்கும் சூழலே நிலவும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு