Published:Updated:

INS Vikrant: அமெரிக்கா - 11; சீனா - 3; இந்தியா - 1; கணக்கைத் தொடங்கிய இந்தியா! சாத்தியமானது எப்படி?

ஐஎன்எஸ் விக்ராந்த்

100 இந்தியத் தொழில் நிறுவனங்கள்; 2,000 பேருக்கு நேரடியாக, 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு; ரூ.20,000 கோடியில் உருவான விமானம் தாங்கிக் கப்பலில் என்ன ஸ்பெஷல்?

INS Vikrant: அமெரிக்கா - 11; சீனா - 3; இந்தியா - 1; கணக்கைத் தொடங்கிய இந்தியா! சாத்தியமானது எப்படி?

100 இந்தியத் தொழில் நிறுவனங்கள்; 2,000 பேருக்கு நேரடியாக, 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு; ரூ.20,000 கோடியில் உருவான விமானம் தாங்கிக் கப்பலில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:
ஐஎன்எஸ் விக்ராந்த்
முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல்.

இதற்கு முன்பு நாம் பயன்படுத்திய விமானம் தாங்கிக் கப்பல்கள் அனைத்தும் நாம் பிறநாடுகளிடமிருந்து வாங்கியவை. ஆனால், தற்போது தயாராகியிருக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் முழுக்க முழுக்க நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007 - ம் ஆண்டு இந்திய ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 - ம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் முடித்து கடந்த 2021 - ம் ஆண்டு, முதல் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 4 கட்டங்களாக நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக, கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை ஒட்டி இன்று செப்டம்பர் 2 - ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியக் கடற்படையுடன் முறைப்படி சேர்த்து வைக்கிறார்.

ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்

கப்பலின் கட்டமைப்பு வசதிகள்.

இந்த விமானம் தாங்கிக் கப்பல் 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் 59 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இந்தக் கப்பலுக்கான கட்டுமானச் செலவு ரூ.19,341 கோடி. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்ப்கி போர்க்கப்பலில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் மற்றும் தளவாடங்கள் 76 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக டெல்லி உள்ளிட்ட 18 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்தப் போர்க்கப்பல்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தத் தயாரிப்பு பொருள்களை நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரித்து வழங்கின. இந்தக் கப்பலில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் அக்னி வீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்ளன. இந்தக் கப்பலில் மொத்தம் 2,200 அறைகள் உள்ளன. உலகின் பெரிய கடற்படையை வைத்திருக்கும் அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. சின்னஞ்சிறிய கடல் எல்லையை வைத்திருக்கும் சீனா இதுபோன்று மூன்று கப்பல்களை வைத்துள்ளது. இன்னும் இரண்டைக் கட்டிவருகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்

இந்த விக்ராந்த் போர் கப்பலின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம்தாங்கிப் போர்க்கப்பலை வைத்திருக்கும் குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 40 ஆயிரம் டன்களுக்கு மேல் எடை கொண்ட விமானம்தாங்கிப் போர்க்கப்பலை வடிவமைத்துத் தயாரிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா ,சீனா, ரஷ்யா ,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விக்ராந்த் விமானதாங்கி போர்க்கப்பல் நாட்டின் கடற் பாதுகாப்பு எல்லையை இந்திய பெருங்கடலில் இருந்து பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் வரை அதிகரிக்கும் என கடற்படை ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த போர்க்கப்பல் இந்திய கடற்படையுடன் இணைவது ஒரு பொன்னான நிகழ்வாக அமையும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஏற்கனவே கூறியிருந்தார். சிறியதும் பெரியதுமாக 100 இந்தியத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் இந்தக் கப்பல் உருவானது. 2,000 பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அத்தனை பேரும் பெருமை கொள்ளத்தக்க நிகழ்வு இது!