Published:Updated:

`கோல்டு மெடல்.. ஜூனியர் கேடர்!'- இம்ரானை கிளீன் போல்டாக்கிய இன்டர்நெட் சென்சேஷன் விதிஷா மைத்ரா யார்?

vidisha maitra
vidisha maitra

மோடியின் பேச்சுக்கு பின்பேசிய இம்ரான் கான் இந்தியா மீது கனலை கக்கினார். கூடவே பொய்களை அடுக்கவும் தவறவில்லை.

இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட உலகின் பல நாட்டின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பேசினர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது மோடி மற்றும் இம்ரான் கானின் உரைகள்தாம். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மோடி, இம்ரானின் உரையை விட அதிகம் கவனம் பெற்றது என்னவோ, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் முதன்மைச் செயலாளர் விதிஷா மைத்ரா உரைதான். மிகவும் காரசாரமாக.. அதேநேரம் கவனமாக விதிஷா அளித்த பதில் உரை குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகவும் அவர் பெயர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற தொடங்கியது. காரணம்... மோடியின் பேச்சுக்கு பின்பேசிய இம்ரான் கான் இந்தியா மீது கனலை கக்கினார். கூடவே பொய்களை அடுக்கவும் தவறவில்லை.

imran
imran

கொடுக்கப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பதிலாக மொத்தம் 50 நிமிடத்துக்கும் மேலாக பேசிய இம்ரான் பாகிஸ்தானின் வளர்ச்சியை குறிப்பிடுவதற்கு பதில் இந்தியாவை குற்றம் சாட்டுவதில் கவனம் செலுத்தினார். அதிலும் 20 நிமிடம் காஷ்மீர் குறித்து மட்டுமே பேசினார். இம்ரானின் இந்த 50 நிமிட பேச்சை ‘Right of Reply’ எனப்படும் `பதிலளிக்கும் உரிமை' மூலம் தனது 5 நிமிட பதிலுரையில் தவிடுபொடி ஆக்கினார் விதிஷா மைத்ரா. குறிப்பாக, ``ஐ.நா பட்டியலிடும் 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கிறதா என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிசெய்ய முன்வருவாரா... 27 நிபந்தனைகளில் 20 நிபந்தனைகளை மீறியதற்காக நிதி நடவடிக்கை பணிக்குழு அளித்த நோட்டீஸை பாகிஸ்தான் மறுக்குமா.. அல்லது ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாக்கவில்லை என அமெரிக்காவிடம் இம்ரான் தெரிவிப்பாரா?” என அடுத்தடுத்த கேள்விகளால் அதிர வைத்தார் விதிஷா. நேர்த்தியான பேச்சு.. சரியான குறிப்புகள்.. கடுமையான தொனி என அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்து அவர் பேசிய பேச்சு ஐ.நா மன்றத்தில் இருந்து பாகிஸ்தான் பிரதிநிதிகளை அதிரவைக்க ஒரேநாளில் `இன்டர்நெட் சென்ஷேன் அதிகாரி' ஆகினார் விதிஷா.

சீனர்களாக மாற ஐந்தாண்டு கெடு; தவிக்கும் உய்குர் இன மக்கள்... குரல் கொடுப்பாரா இம்ரான் கான்?

யார் இந்த விதிஷா மைத்ரா?

2009 பேட்ச் IFS அதிகாரியான இந்த விதிஷா மைத்ரா 2008ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 39வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர். வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக அறியப்படும் அதேநேரம் கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி (பிபி & ஆர்) பிரிவின் துணை செயலாளரும்கூட. ஐ.நா.வின் `நிரந்தர உறுப்பினர்' பெறும் இந்தியாவின் மிஷனில் புதிதாக இணைந்த உறுப்பினர் விதிஷா தான் என்றாலும், 2009-ல் IFS அதிகாரிகளுக்கான பயிற்சியில் திறம்பட செயல்பட்டதற்காக ‘சிறந்த பயிற்சி அதிகாரி’க்கு கொடுக்கப்படும் தங்கப் பதக்கத்தை வென்றவர். ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதிக்கான பிரிவிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பான விஷயங்களையும் ஆராய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வரும் விதிஷா மைத்ரா ஒரு ஜூனியர் அதிகாரி.

vidisha maitra won gold medal
vidisha maitra won gold medal

ஜூனியர் கேடரில் இருந்தாலும் தனது செயல்பட்டால் `திறமையான அதிகாரி'யாக வெளியுறவு வட்டாரங்களில் வலம்வருகிறார். இதனால் எளிதாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு செல்ல ‘Right of Reply’ எனப்படும் `பதிலளிக்கும் உரிமை' மூலம் தகுந்த புள்ளி விவரங்களுடன் பாகிஸ்தானை லெப்ட் அண்ட் ரைட் வாங்கவே ஒரே நாளில் இந்தியா முழுவதும் கவனம் பெறத் தொடங்கியுள்ளார்.

அரற்றும் இம்ரான்... அமைதி மோடி... காஷ்மீர் ட்வீட் போரில் ஸ்மார்ட் யார்?

விதிஷாவின் முழு உரை!

``இந்தச் சபையில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என நம்பப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு உலகை இரண்டாக பிரிக்கும் சித்தரிப்பு போல் இருந்தது. எங்களுக்கு எதிராக, பணக்கார மற்றும் ஏழை, வடக்கு மற்றும் தெற்கு, வளர்ந்த மற்றும் வளரும், முஸ்லிம்கள் மற்றவர்கள் என்று இந்த சபையில் பிளவுகளை ஏற்படுத்தும் வசனங்கள் பேசப்பட்டு இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும் வெறும் வெறுப்பு பேச்சுக்கள் மட்டுமே இது. கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பையும் `துஷ்பிரயோகம் செய்யும் இதுபோன்ற வசைபாடும் நிகழ்வினை இந்த சபை மிக அரிதாகவே கண்டுள்ளது.

vidisha maitra
vidisha maitra

பாகிஸ்தான் பிரதமர் அணு ஆயுதங்கள் தொடர்பாக திரும்பத் திரும்ப பேசுவது அவரின் சாதுர்யத்தைக் காட்டிலும் போரில் ஈடுபடாத வண்ணம் செயல்படும் ராஜதந்திரத்தையே காட்டுகிறது. ராஜதந்திரத்தில் நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் முக்கியமானவை. `படுகொலை'; `இரத்தக் கொதிப்பு', `துப்பாக்கியை எடுப்பது', `இறுதிவரை போராடுவது', `ரத்தக்களரி' என இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தும் இடைக்கால மனநிலையையே பிரதிபலிப்பதாக உள்ளது. இது 21-ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டம் கிடையாது. இம்ரான் கான் நியாஜி தனது வரலாறு குறித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

`இந்தியர்களுக்கு வேறு குரல் தேவையில்லை!’ - இம்ரானுக்கு ஐ.நா-வில் பதிலடி கொடுத்த வதிஷா மைத்ரா

1971-ல் பாகிஸ்தான் சொந்த மக்களின் மேல் நடத்திய வன்முறையையும், இனப் படுகொலையையும் மதியம் இந்த அவையில் பேசிய வங்கதேசப் பிரதமர் எடுத்துக் கூறினார் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிரவாத தொழிலை சங்கிலித் தொடர் போல ஏகபோகமாக நடத்தி வரும் ஒரு நாட்டின் தலைவர் பிரதமர் இம்ரான் கான் தீவிரவாத த்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடான செயல் மட்டுமல்ல தீங்கு விளைவிக்கும் செயலும்கூட. அவரது பேச்சு ஆத்திரமூட்டுவதாக இருந்தது. காஷ்மீர் மக்கள் சார்பில் பேசுவதாக இம்ரான் கான் இங்கே குறிப்பிட்டார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவின் உண்மையான பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்.

vidisha maitra
vidisha maitra

இந்தியக் குடிமக்களுக்காக வேறு யாரும் குரல் கொடுக்க வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக தீவிரவாதம் மற்றும் வெறுப்பை வளர்க்கிறவர்கள் இந்தியாவுக்காகப் பேச வேண்டாம். தனது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக தீவிரவாதத்தை மாற்றியுள்ள பாகிஸ்தான் தற்போது தன்னை `மனித உரிமைக் காவலர்' போல காட்டிக் கொள்ள முயல்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் இல்லை என்பதை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து பார்க்கலாம் என அந்நாட்டு பிரதமர் இங்கே குறிப்பிட்டார். அதற்கு முன் பாகிஸ்தான் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

`ஐ.நா பட்டியலிடும் 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கிறதா என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிசெய்ய முன்வருவாரா... 27 நிபந்தனைகளில் 20 நிபந்தனைகளை மீறியதற்காக நிதி நடவடிக்கை பணிக்குழு அளித்த நோட்டீஸை பாகிஸ்தான் மறுக்குமா.. அல்லது ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாக்கவில்லை என அமெரிக்காவிடம் இம்ரான் தெரிவிப்பாரா. `ஐ.நா-வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் தீவிரவாதிக்கு பென்ஷன் அளிக்கும் ஒரே நாடாக பாகிஸ்தான் இருக்கும் என்றால் அதை மறுப்பீர்களா?'.

பாகிஸ்தானில் 1947-ம் ஆண்டில் 23% ஆக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை தற்போது 3% - ஆக குறைந்திருக்கிறது. மற்ற சமூகத்தைப் பின்பற்றுபவர்கள், கடுமையான சட்டங்கள் மூலமாகவும் துன்புறுத்தல் மூலமாகவும் கட்டாய மதமாற்றங்கள் மூலமாகவும் இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்து, ஜென்டில்மேன் விளையாட்டை நம்பிய ஒருவரின் இன்றைய பேச்சு முரட்டுத்தனத்தின் உச்சமாக இருந்தது" என கடுமையான குரலில் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு