Published:Updated:

'விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பினேன்'- மம்தா பானர்ஜி... பின்னணி என்ன?

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த விமானம் நடுவானில் விபத்துக்குள்ளாகும் நிலையில், விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்துள்ளார்.

'விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பினேன்'- மம்தா பானர்ஜி... பின்னணி என்ன?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த விமானம் நடுவானில் விபத்துக்குள்ளாகும் நிலையில், விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்துள்ளார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்தில் கொல்கத்தா திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மம்தாவின் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கையில் மற்றொரு விமானம் எதிரே மோதுவது போல வந்துள்ளது. அந்தச் சமயத்தில் விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தை 8000அடி கீழே இறக்கி வேறொரு பாதையில் விமானத்தைச் செலுத்தி விபத்தைத் தவிர்த்துள்ளார்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

இதுகுறித்துச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, ‘எதிரே மோத வந்த விமானத்தை கவனிக்காமல் 10 விநாடி சென்றிருந்தால்கூட இரு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதிப் பெரும் விபத்திற்குள்ளாகியிருக்கும். விமானியின் சாதுர்யமான செயலால் விபத்து ஏதும் ஏற்படாமல் தப்பினோம்’ என்று கூறினார். மேலும் இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் மம்தா சென்ற விமானம் காற்றழுத்தம் குறைவான வான் வெளியில் பறக்க நேர்ந்து நிலை தடுமாறியபோது, விமானி விமானத்தைக் கீழே இறக்கி வேறுபாதைக்குத் திருப்பி விபத்து நிகழாமல் தவிர்த்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களிலும் மம்தா பானர்ஜிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வலி இன்னும் இருந்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஏடிசி மற்றும் டிஜிசிஏவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் மம்தா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!