Published:Updated:

Akash Ambani : அன்று 5 ரூபாய் பாக்கெட் மணி; இன்று Jio தலைவர்; மகனுக்கு மகுடம் சூட்டிய முகேஷ் அம்பானி

அம்பானி

Reliance jio - விலிருந்து முகேஷ் ராஜினாமா செய்துவிட்டு தன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை அதன் தலைவராக நியமித்துள்ளார்.

Akash Ambani : அன்று 5 ரூபாய் பாக்கெட் மணி; இன்று Jio தலைவர்; மகனுக்கு மகுடம் சூட்டிய முகேஷ் அம்பானி

Reliance jio - விலிருந்து முகேஷ் ராஜினாமா செய்துவிட்டு தன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை அதன் தலைவராக நியமித்துள்ளார்.

Published:Updated:
அம்பானி
மகனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்று ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்துவிட்டு இந்திய செல்போன் மார்க்கெட்டை நினைத்துப் பார்க்க முடியாது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதன் துணை நிறுவனங்களில் ஒன்று, ரிலையன்ஸ் ஜியோ. இப்போது ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து முகேஷ் ராஜினாமா செய்துவிட்டு தன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை அதன் தலைவராக நியமித்துள்ளார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் 30 வயதில் தலைமைப் பதவிக்கு வந்துள்ளார் ஆகாஷ். 'பொறந்தா அம்பானியா பொறக்கணும்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள் பலர். 'அம்பாசமுத்திரம் அம்பானி' படமெல்லாம் அந்த ஏக்கப் பெருமூச்சின் சினிமா வெர்ஷன். ஆனால், அம்பானி குடும்பத்தில் பிறந்த ஒருவர் எப்படி வளர்ந்திருப்பார் என்பதை ஆகாஷ் அம்பானியின் வாழ்க்கை உணர்த்தும்.

திருபாய் அம்பானி
திருபாய் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. அதை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருப்பவர் அவரின் மூத்த மகன் முகேஷ் அம்பானி. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக அம்பானி குடும்பம் இருக்கிறது. என்றாலும் தன் பிள்ளைகளை அந்த கர்வத்துடன் வளர்க்கவில்லை முகேஷ் அம்பானியும் அவர் மனைவி நீதா அம்பானியும்.

முகேஷ் அம்பானிக்கு மூன்று வாரிசுகள். மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷா இருவரும் இரட்டையர்கள். இளைய மகன் ஆனந்த். அம்பானி குடும்பமே மும்பையில் நடத்தும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில்தான் மூவருமே படித்தார்கள்.

ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி

பள்ளி கேன்டீனில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட ஒவ்வொருவருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமே கொடுத்து அனுப்புவார் அம்மா நீதா. பாக்கெட்டிலிருந்து அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கேன்டீனில் கொடுக்க அவமானமாக இருக்கும். 'அம்பானி குடும்பம் என்கிறாய்? பிச்சைக்காரன் போல செலவு செய்கிறாயே' என்று பள்ளி நண்பர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று அம்மாவிடம் வந்து அவர்கள் புகார் செய்தாலும், ஐந்து ரூபாயை விட அதிகமாக அவர்களுக்கு பாக்கெட் மணி கிடைக்கவில்லை.

''பணம் மரத்தில் காய்க்கவில்லை. கஷ்டப்பட்டு உழைத்துதான் அதை சம்பாதிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன். பணத்தின் மதிப்பை உணர்ந்து குழந்தைகள் வளர வேண்டும் என்று முகேஷ் எப்போதும் சொல்வார்'' என்கிறார் அம்மா நீதா அம்பானி.

ரிலையன்ஸ் அம்பானி
ரிலையன்ஸ் அம்பானி
reliance ambani

ஒருமுறை வீட்டு வாட்ச்மேனை கடுமையான வார்த்தைகளால் ஆகாஷ் திட்டியதை அப்பா முகேஷ் பார்த்துவிட்டார். உடனே மகனைக் கூப்பிட்டு கண்டித்து, ''வயதில் பெரியவர்களை ஒருமையில் பேசி திட்டுவது தவறான பழக்கம். அவரிடம் மன்னிப்பு கேள்'' என்று வாட்ச்மேனிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். ''பணமும் அதிகாரமும் இணைந்து கைக்கு வரும்போது, கூடவே பொறுப்புணர்வும் பணிவும் வர வேண்டும். கட்டுப்பாடான நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் எப்படி பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பார்களோ, அப்படித்தான் என் பிள்ளைகளை வளர்த்தேன்'' என்கிறார் நீதா அம்பானி.

தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனக்குப் பிறகு பிள்ளைகள் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களைத் திட்டமிட்டு உருவாக்கினார் முகேஷ். அதனால் ஆகாஷ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் எகனாமிக்ஸ் படித்தார்.

பட்டம் வாங்கிய நான்காவது நாளே, ரிலையன்ஸ் நிறுவனத்தில் இயக்குநராக இணைந்தார். அது 2014-ம் ஆண்டு. ரிலையன்ஸ் அப்போதுதான் செல்போன் மார்க்கெட்டில் நுழைய ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. 60 பேர் கொண்ட ஒரு குழுவை வைத்து ஜியோ நிறுவனத்தை உருவாக்கியிருந்தார்கள்.

டெக்னாலஜியில் ஆர்வமுள்ள ஆகாஷ், உடனடியாக ரிலையன்ஸ் ஜியோ டீமில் திட்டமிடல் பிரிவு தலைவராக இணைந்தார். அப்போது மற்ற நிறுவனங்கள் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்க, 4ஜி நெட்வொர்க்கில் ஜியோ சேவையை வழங்குவது என ஆகாஷ் முடிவெடுத்தார். அந்த முடிவால் ரிலையன்ஸ் ஜியோ, இந்திய செல்போன் மற்றும் பொழுதுபோக்கு மார்க்கெட்டில் மாபெரும் புரட்சியை நிகழ்த்தியது. ஜியோ சாட், ஜியோ சினிமா, ஜியோ டி.வி என அதன் அடுத்தடுத்த முயற்சிகளிலும் ஆகாஷின் பங்கு அதிகம்.

ஆகாஷ் அம்பானி தன் சகோதரியுடன்
ஆகாஷ் அம்பானி தன் சகோதரியுடன்

டெக்னாலஜி போலவே விளையாட்டிலும் ஆகாஷுக்கு ஆர்வம் அதிகம். வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர். மும்பை இந்தியன் அணியின் இணை உரிமையாளராக இருக்கிறார். கிரிக்கெட் போலவே கால்பந்து ஆர்வமும் உண்டு. உலகக் கோப்பை கால்பந்து வீடியோ கேமை நேரம் போவதே தெரியாமல் ஆடுவார். அந்த ஆர்வம்தான், ஜியோ சேவையில் கேமிங்கையும் சேர்க்கக் காரணமாக இருந்தது.

ஆகாஷுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனது பள்ளிப்பருவத் தோழியான ஷ்லோகா மேத்தா என்பவரைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் மணந்தார். பிரபல வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் இவர். மூன்று நாட்கள் மும்பையைக் குலுங்கவைத்த இந்த திருமணத்துக்கு பிரியங்கா சோப்ரா முதல் பாலிவுட்டே வரிசையில் வந்து வாழ்த்தியது. இந்த தம்பதிக்கு பிரித்வி ஆகாஷ் அம்பானி என்று ஒரு மகன் இருக்கிறான்.

விதவிதமான கார்களை வாங்கிக் குவிப்பதில் ஆகாஷுக்கு ஆசை உண்டு. மெர்சிடஸ் பென்ஸ் ஜி வேகன், ரேஞ்ச் ரோவர் வோக், ரோல்ஸ்ராய்ஸ் பேன்டம் கூப் என ஏராளமான கார்கள் வைத்திருக்கிறார். ஆகாஷுக்கு வாழ்க்கையில் ஒரே ரோல் மாடல், அவர் அப்பா முகேஷ் அம்பானி. அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டார். 30 வயதிலும் தந்தை சொல்லைத் தட்டாத பிள்ளை.